Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு சுங்கச்சாவடியில் அரை மணி நேரமாகுது.. தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? மதுரை ஐகோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரை மணி நேரமாகிறது என்றும், இந்த தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான் என்று கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் வசூலித்து வருகிறது. அந்த வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 78 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.

Chennai High Court Madurai Bench Questions Toll Gate Delays on National Highways

அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் சுங்கச்சாவடியை கடப்பதற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை இருந்து வருகிறது.

அதுவும் வார இறுதி நாட்களில் சுங்கச்சாவடியில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரை மணி நேரமாகிறது.

சுங்கச்சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா என்று கேள்வி எழுப்பியது. இதன்பின் தேசிய நெடுஞ்சாலை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு பல்வேறு முறை கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+