லிபியா பயணம் ஏன்? மதுரை விமான நிலையத்தில் இளைஞர் கைது- தீவிரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை
மதுரை: துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இளைஞரை மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயண தடை விதிக்கப்பட்ட லிபியாவுக்கு பிரவீன் சென்றது ஏன் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Recommended Video

துபாயில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த பிரவின் என்ற சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு துபாய்க்கு வேலைக்கு பிரவின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.

2019- ல் துபாயில் இருந்து லிபியா சென்றுள்ளார் பிரவீன். லிபியாவில் இருந்து தற்பொழுது துபாய் மூலமாக மதுரை வந்ததால் சந்தேகமடைந்த குடியேற்ற துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஏமன், ஓமன், துபாய், சவுதி அரேபியா, எகிப்து ,ஈரான் போன்ற நாடுகளை தவிர மற்ற அரபு நாடுகளுக்கு செல்ல பயண தடை விதிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாக் அந்த நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி பிரவீன் லிபியா சென்று வந்தது உறுதி செய்யப்பட்டதால் மதுரை பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications