''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..'' பி.எஸ்.ஓ.வுக்கு மதுரையில் புத்திமதி சொன்ன ஸ்டாலின்!
பொதுமக்களிடம் கோபப்படக் கூடாது என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.
மதுரை: தன்னிடம் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கெடுபிடி காட்டிய பாதுகாப்பு அதிகாரியிடம் ''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..''என முதலமைச்சர் ஸ்டாலின் புத்திமதி கூறிய நிகழ்வு மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தச் சென்ற போது அவரிடம் நேரடியாக மனு அளிக்க மக்கள் அலைமோதினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும், பி.எஸ்.ஓ.க்களும் பொதுமக்களிடம் கெடுபிடி காட்டியதை ஸ்டாலின் பார்த்துவிட்டு இந்த அறுவுரையை வழங்கினார்.

கள ஆய்வில் முதல்வர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரையில் ஸ்டாலின்
அதன் தொடர்ச்சியாக, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்தார் முதல்வர் ஸ்டாலின். விமான நிலையத்தில் அவருக்கு திமுகவினர் உற்சாகமிகு வரவேற்பு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர் 5 மாவட்ட கலெக்டர்களை வரவழைத்து ஆய்வு செய்தார்.

கோபப்படக் கூடாது
முன்னதாக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை நேரில் கொடுப்பதற்காக பொதுமக்கள் அலைமோதினர். அவர்களிடத்தில் மனுவை பெற்றுக் கொண்டிருந்த போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் கறாராக கெடுபிடி காட்டினர். இதை அந்த பரபரப்புக்கு மத்தியிலும் பார்த்துவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''கோபப்படக் கூடாது.. கோபப்படகூடாது..'' என அறிவுரை வழங்கினார். இதையடுத்து பொதுமக்கள் நேரடியாக முதல்வரிடம் மனு கொடுத்தனர்.

மக்கள் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை மக்கள் சந்திப்பு, சுற்றுப்பயணம், ஆய்வு, என்றால் அவருக்கு சலிப்பே ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை மதுரை மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், மாலை சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியகம் தொடங்கி வைக்கிறார். நாளை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications