தண்ணீர் இல்லம்மா அது.. அவசரத்தில் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்.. கவனக்குறைவால் பறிபோன உயிர்!
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, அவரது தாயார் அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து குடிக்க கொடுத்தார். இதனால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் நடந்த அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிறுமியின் தாயார் கதறி அழுதபடி குற்றம்சாட்டி உள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதிக்கு அகல்யா என்ற 8 வயது மகள் உள்ளார். அகல்யாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக் செயல்பாடு குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை அகல்யாவை அழைத்துக்கொண்டு சென்று புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்கள்.
ஆனால் குழந்தைக்கு தீவிரமான உயர்சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இதையடுத்து மாதம் 30-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அகல்யாவை ஆனந்தகுமார்-தீபா தம்பதி அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்துள்ளார்கள். அதன் பின்னர் சிறுமி அகல்யாவிற்கு ரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றம் அடைந்த அகல்யாவின் தாய் தீபா, அப்போது அகல்யாவின் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமியின் குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அது பாத்ரூம் உள்பட அறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை சிறுமி குடிக்கவில்லையாம். தண்ணீர் இல்லை என தெரிந்த சிறுமி அதனை உடனே துப்பி இருக்கிறாராம். இதை பார்த்த செவிலியர் அது ஸ்பிரிட் என்பதை கூறி எச்சரித்துள்ளார்.
ஆனாலும் சிறுமிக்கு திடீர் உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அகல்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இன்று (வெள்ளிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாக சிறுமியின் தாய் தீபா குற்றம்சாட்டி உள்ளார். டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்த காரணத்தால் தான் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சிறுமி ஸ்பிரிட்டை முழுமையாக குடிக்காத போதிலும் சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனதாகவும் தாய் தீபா வேதனையுடன் கூறினார்.

இதையடுத்து குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி கவனக்குறைவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications