விதிமுறைகளை மீறிய நீதிபதி சுவாமிநாதன்! காவல் துறைக்கு CISF இணையானவர்கள் இல்லை- தமிழக அரசு வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர்நீதிமன்ற பாதுகாப்புக்கு வந்தவர்கள், அவர்களால் எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும், அவர்கள் தமிழக காவல் துறைக்கு இணையானவர்கள் அல்ல என திருப்பரங்குன்றம் அவசர வழக்கில் தமிழக அரசு தரப்பு வாதிட்டுள்ளது.

Thirupparankundram

திருப்பரங்குன்றத்தில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெயசந்திரன் விசாரணை நடத்தி வருகிறார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர்நீதிமன்ற பாதுகாப்புக்கு வந்தவர்கள், அவர்களால் எப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும், அவர்கள் தமிழக காவல் துறைக்கு இணையானவர்கள் அல்ல.

"நேற்று மாலை 6 மணிக்கு தீபத் தூணில் விளக்கேற்ற வேண்டும். இல்லாவிட்டால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்" என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற அவமதிப்புக்கு அன்றே தண்டனை வழங்க முடியாது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டிய நிலையில் விதிமுறைகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளார் சுவாமிநாதன்" என வாதிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+