சாலையோர டீக்கடையில்.. அமைச்சர்களுடன் டீ சாப்பிட்ட முதல்வர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது திருநகர் பகுதியில் சாலை ஓரம் அமர்ந்து தேநீர் அருந்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அதிமுக தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

cm eps takes a tea break near madurai

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். முதலாவதாக நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்துவிட்டு, வடபழஞ்சி கிராமத்தில் பிரசரத்தில் ஈடுபட்டார்.

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.. உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசினார். அதனை தொடர்ந்து மதுரை திருநகர் பகுதியில் உள்ள சிறிய டீக்கடையில் சாலை ஓரம் அமர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனீர் அருந்தினார்.

உடன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, மற்றும் மூத்த நிர்வாகி வைத்தியலிங்கம் ஆகியோரும் டீ சாப்பிட்டார்கள்.

முதல்வர் டீ சாப்பிடுவதைப் பார்க்க அங்கு மக்கள் கூடி விட்டனர், அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+