Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈஸியாக தொழில் தொடங்க முடியனும்.. நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடிக்கனும்! இதுதான் டார்கெட்- ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாடு விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும் என தோள் கொடுப்போம் தொழில்களுக்கு தெற்கு மண்டல மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை, அழகர் கோயில் சாலை, கோர்ட்யார்ட் மாரியட், செலிப்ரேஷன் அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்காக "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" மாநாட்டில் புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார்.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதல்வர் தலைமையில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' தெற்கு மண்டல மாநாடு தொடங்கியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். கரூர், ராமநாதபுரம் தொழிற்பேட்டையில் ரூ.2.83 கோடியில் பொது வசதி கட்டிடங்கள் திறக்கப்பட்டது. வங்கி கடனுக்கான தடையின்மை சான்று, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 12 சேவைகளுக்கு ஆன்லைன் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கி வைத்துள்ளேன். தொழில்கள் மூலம் மட்டுமே ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி என்பது பெரிய தொழில் மட்டும் அல்ல, சிறிய தொழில்கள் வளர்வதும் ஆகும் என்றார்.

தூங்கா நகரம் மதுரை

தூங்கா நகரம் மதுரை

மதுரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மதுரை சுங்கடி சேலைகள், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், அப்பளம் பெயர் பெற்றவை. புவிசார் குறியீடு பெற்ற 48 பொருட்களில் 18 பொருட்கள் தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை,சிறுமலை மலை வாழைப்பழம்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், மதுரை சுங்கிடி, கன்னியாகுமரி கிராம்பு, காரைக்குடி கண்டாங்கி சேலை, செட்டிநாடு கொட்டான் பனை ஓலைப்பொருட்கள் பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. மேலும் புவிசார் குறியீடு பெற 25 பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அதில் 14 பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை. வெளிநாடுகளில் இந்த பொருட்களுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது.

 வங்கிகள் கடன்

வங்கிகள் கடன்

சிறு குறு தொழில் முனைவோர்களை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். விருது பெற்ற நிறுவனங்கள் மேன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். வங்கிகள் அனைத்து பிரிவினருக்கும் கடன்கள் வழங்க வேண்டும் என்று வங்கிகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சமச்சீரான தொழில் வளர்ச்சி

சமச்சீரான தொழில் வளர்ச்சி

சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் 5,000 பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் 3.37 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

 எளிதாக தொழில் தொடங்கும் மாநிலம்

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலம்

எளிதாக தொழில் தொடங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழ்நாடு விரைவில் முதல் இடத்தை பிடிப்பதே இலக்கு. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் புத்தொழில் பெற வேண்டும் என்பதே இலக்கு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+