மதுரை வரும் விஜய்.. மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் முதல்வர்.. அலப்பறை கொடுக்க தவெக தயார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை வரும் முதல்வர் விஜய், மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் விமான நிலையம் முதல் ராசாசி மருத்துவமனை செல்லும் முதல்வர் விஜய், பின்னர் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்ல இருக்கிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நாளை மதுரையில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு ஜூன் 23ஆம் தேதியே வெளியிடப்பட்டது. இதற்காக ரூ.717 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது. அதன்படி ரூ.1 பைசா லாபம் மட்டுமே கோரி, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் டெண்டரை கைப்பற்றியது.

Meenakshi Amman Temple

இறுதியாக ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் 70:30 என்ற ரீதியில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. முதலில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக செப்டம்பர் 28ஆம் தேதி திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. மதுரை ராசாசி அரசு மருத்துவமனையில் இந்த திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். மதுரை விமான நிலையம் வரும் முதல்வர் விஜய், அங்கிருந்து ராசாசி மருத்துவமனை வருகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே பல்வேறு பகுதிகளிலும் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் நன்றாக இருக்கும் சாலைகளில் ஏதேனும் குழிகள் இருந்தால், உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்னொரு விஷயமும் தெரிய வந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு விஜய் சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசாசி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்த பின், அங்கிருந்து முதல்வர் விஜய் நேராக மீனாட்சியம்மன் கோயில் செல்கிறார். செப்டம்பர் 17ஆம் தேதி தான் மீனாட்சியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன்பின் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை மண்டல பூஜைகள் நடந்து வருகின்றன.

இதனால் விஜய் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார். முதல்வரான பின் விஜய் முதல்முறையாக மதுரை வருவதால், அவருக்கு தவெகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோயில் வரை விஜய்க்கு அவரின் தொண்டர்கள் கோலாகல வரவேற்பு அளிப்பார்கள் என்று அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+