இன்பநிதிக்காக எழுந்தேனா? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி வந்திருந்தார். அவர் உட்காருவதற்காக மாவட்ட ஆட்சியர் எழுந்து இடம் கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதற்கு ஆட்சியர் பதில் அளித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவை பார்க்க .உதயநிதி அவரது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் வந்திருந்தார்கள். இன்பநிதியின் நண்பர்களுக்கு மேடையில் அமர இடம் கிடைக்கவில்லை. அப்போது இன்பநிதி எழுந்து உதயநிதியின் இருக்கையில் அமர்ந்தார். இதை பார்த்த மற்ற அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும் எழுந்து இடம் கொடுத்தாக சொல்லப்படுகிறது.

inbanithi alanganallur jallikattu udhayanidhi stalin

அரசு பொறுப்பில் இல்லாத ஒரு நபருக்காக எதற்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா எழுந்திரிக்க வேண்டும்? என பாஜகவினர் கேள்வி எழுப்பினர். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறார்கள்?

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்" என்று கூறியிருந்தார்.

நெட்டிசன்களும், பாஜக ஆதரவாளர்களும் சோஷியல் மீடியாக்களில் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து விமர்சித்திருந்தனர். இந்நிலையில் விமர்சனங்களுக்கு ஆட்சியர் பதிலளித்துள்ளார். அதாவது, "துணை முதல்வர் எழுந்து நின்றபோது விதிகளின்படியே நானும் எழுந்தேன். புகைப்படங்களில் திரித்து சொல்லப்படுகிறது" என்று கூறியுள்ளார். இவரது கூற்றை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் அமர்ந்தவாறு ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+