ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கு கட்டண வசூல்.. நடிகர் சூரியின் அம்மன் உணவகத்தின் மீது மீண்டும் புகார்
மதுரை: மதுரை மாநகரில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் மீண்டும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் பிரபலமடைந்தவர் மதுரையை சேர்ந்த நடிகர் சூரி. இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. பெரும்பாலும் கார்த்தியுடனும் சிவகார்த்திகேயனுடனும் நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
நடிகர், நடிகைகள் பெரும்பாலும் கூடுதலாக ஏதாவது ஒருதொழிலில் முதலீடு செய்கிறார்கள். ஹோட்டல் பிசினஸ், அழகு நிலையங்கள், சாப்ட்வேர் நிறுவனம்- இப்படியாக தொழில்களில் தாங்கள் சம்பாதிக்கும் காசை போடுகிறார்கள்.

நடிகர் சூரி
அந்த வகையில் நடிகர் சூரியும் மதுரை உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் நடத்தி வருகிறார். இவருக்கு மதுரை மாநகர், செல்லூர் ஒத்தக்கடை, ஊமச்சிகுளம்,ஆத்திகுளம் கடச்சனேந்தல் அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல்கள் அமைந்துள்ளது.

உணவகம்
இங்கு உணவகம் மற்றும் தேநீர் கடைகளில் ஜிஎஸ்டி வரியில்லாமல் வெறும் உணவுக்கான கட்டணத்தை மட்டும் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தெப்பக்குளம், ஆத்திகுளம் பகுதியில் உள்ள உணவகங்களில் உணவுகளுக்கு மட்டும் GSTவரியுடன் ரசீது வழங்கப்படும் நிலையில் மற்ற கிளைகளில் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. பாதாம் பானம் வாங்கிய நபருக்கு வெறும் அந்த ஜூஸுக்கான 20 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்
இதன் மூலம் நாள்தோறும் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சூரியின் உணவகங்களில் வணிக வரித் துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக தெப்பக்குளம் அருகே உள்ள அம்மன் உணவகத்தில் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஜிஎஸ்டி வசூலிக்கப்படவில்லை
இங்கு ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த சோதனை நடந்தது. உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. மேலும் ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது. ஏற்கெனவே தெப்பக்குளத்தில் சோதனை நடந்திருந்த நிலையில் தற்போது அங்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுவிட்டு மற்ற கிளைகளில் ஜிஎஸ்டி இன்றியே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications