மோடி வீட்டுக்கு போகும் நேரம் நெருங்கவிட்டது.. ராகுலுக்கு பெருகும் ஆதரவு! மாணிக்கம் தாகூர் நம்பிக்கை
மதுரை: திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் விருதுநகர் மாணிக்கம் தாகூர், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மொத்தம் 54 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு சுமார் 1500 பேர் பலன் அடைந்தனர். 8 முதல் டிகிரி முடித்தவர்களுக்குத் தகுதி அடிப்படையில் வேலை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மாணிக்கம் தாகூர்
இந்த வேலைவாய்ப்பை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மாபெரும் வேலைவாய்ப்பு சுமார் 1500 பேர் பலன் அடைவார்கள். பிரபல நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று உள்ளனர். பல இடங்களில் இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

ராகுல் காந்தி
கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத ஒற்றுமை யாத்திரை, கேரளாவைக் கடந்து இப்போது கர்நாடகாவில் உள்ளது. செல்லும் அனைத்து இடங்களிலும் ராகுல் காந்திக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது. ராகுல் காந்தி டெல்லி செல்லும் நேரம் மோடி வீட்டுக்குச் செல்வார். அந்தளவுக்கு ராகுல் காந்திக்கு மக்களிடையே ஆதரவுக்கு மிகப் பெரிய அளவில் உள்ளது.

பட்டாசு
டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்கள் சிவகாசி பட்டாசுகளைத் தடை விதித்துள்ளன.. கடந்த காலங்களிலும் இதுபோன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்ட போது, முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் தடை நீக்கி விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் ஏற்பட்டுள்ள தடையை நீக்கி சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி இப்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக நாங்கள் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து உள்ளோம். அப்போது மாநிலங்கள் தான் இந்த விவகாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு என்றே கூறியது. தற்போது தமிழக அரசு முறையாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆன்லைனில் விளையாட்டைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வந்து உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இதேபோல ஆன்லைன் ரம்மியை தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

ஒப்புதல்
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மியை ரத்து சட்ட மசோதாவுக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளித்து உள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல் நீட் சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறார்.. இது ஆர்எஸ்எஸின் நிலைப்பாடாகவே நாம் பார்க்க முடிகிறது.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன் ஒட்டுமொத்த தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பெருமை. அவரை குறிப்பிட்ட மதம் அல்லது இனத்தை வைத்துச் சுருக்கிவிடக் கூடாது.. அவரை நாம் கொண்டாடவே வேண்டுமோ தவிர இதுபோன்ற சர்ச்சைகள் தேவையில்லை.. இதுபோல அனைத்திலும் வன்முறையைச் செய்ய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் வேலை. இதற்காகவே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்து உள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications