6 மாதங்களில் எய்ம்ஸ் கட்டடப் பணிகள்.. விரைவில் வரைபடம் தயாரிப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர், மள்ளப்புரம் பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டடப் பணிகளைப் பார்வையிட்டார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு தமிழக சுகாதார துறையிடம் விவரங்களை சேகரித்துள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் தமிழக அளவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதலிடத்தில் உள்ளது

இன்னுயிர் காப்போம் திட்டம்
தமிழகம் முழுவதும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 96,807 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 3185 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை ரூ.87.34 கோடி செலவிடப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டண படுக்கை மையம் அமைக்கபட உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 61 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் குறைவு
தமிழகத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 95.95 சதவிகிதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 88.52 சதவிகிதமும் செலுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 86.20 சதவிகிதம் பேருக்கும், இரண்டாம் தவணை 75.02 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மதுரை பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எய்ம்ஸ் எப்போது?
இதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டிட வடிமைப்பிற்கான டெண்டர் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வரைபடம் தயாரித்து எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 6 அல்லது 7 மாதங்களில் தொடங்கிவிடும் என்று தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications