2 முறை எம்எல்ஏ! ஆனால் கடைசி வரை வாடகை வீடு! காலமானார் மக்கள் தொண்டர் நன்மாறன்!
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகத்தான மக்கள் தொண்டர் நன்மாறன் (வயது 72) உடல்நலக் குறைவால் மதுரையில் இன்று காலமானார். நன்மாறன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
2001,2006 சட்டசபை தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் சி.பி.எம். வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றவர் நன்மாறன். மிக எளிமையான மனிதராக வாழ்ந்தவர். அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெருமதிப்பையும் பெற்றவர்.
எம்.எல்.ஏ. பதவி மூலம் கிடைத்த ஊதியத்தை கட்சிப் பணிகளுக்கே கொடுத்தார். தமக்கு கட்சி கொடுத்த ரூ12,000-ல் மட்டுமே குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தியவர் நன்மாறன். மதுரை ஆரப்பாளையத்தில் ரூ6,000-க்கான வாடகை வீட்டில்தான் கடைசி வரை வாழ்ந்தார்.

மகத்தான மக்கள் தொண்டர்
மக்களுக்காக 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருந்த மகத்தான மக்கள் தொண்டராக திகழ்ந்தார். மதுரையில் ஐடி பார்க், சென்னை உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்டவை உருவாக பெரும் பாடுபட்டவர். கடந்த ஆண்டு பேருந்து ஏற முயற்சித்த போது நன்மாறன் ஒரு செருப்பை தவறவிட்டார். அதை எடுக்க நன்மாறன் ஓடினார். ஆனால் பேருந்து நிற்காமல் சென்றது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், இது நன்மாறன் அய்யாவாச்சே..என பதறியபடி அவரை தமது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அப்போதும் கூட என்னிடம் ரூ20 தானே இருக்கிறது என பதறியிருக்கிறார் நன்மாறன். அதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னபடியே நன்மாறன் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய்விட்டார் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி. அந்த அளவுக்கு எளிமையானவராக இருந்தார் நன்மாறன்.

வாடகை வீட்டுக்கு மனு
பிப்ரவரி மாதம் மதுரை ஆட்சியரிடம் நன்மாறன் ஒரு மனு கொடுத்திருந்தார். அந்த மனு அனைவரையும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க வைத்தது. ராஜாக்கூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படுகிற வீடுகளில் ஒன்றை தமக்கு ஒதுக்க ஆவண செய்ய வேண்டும் என்பதுதான் அந்த மனு. அதையும் தமது மனைவி பெயரில் ஒதுக்கித் தாருங்கள் என கேட்டிருந்தார் நன்மாறன். தமிழகம் முழுவதும் நன்மாறனின் எளிமை வாழ்க்கை ஆச்சரியத்துடன் பேசப்பட்டது.

தொடர்ந்து பணி
தமது 72 வயதிலும் கட்சிப் பணிகள், இலக்கிய பணிகளில் தொய்வின்றி பயணித்தார். அரசு பேருந்துகளில்தான், ஷேர் ஆட்டோக்களில்தான் நன்மாறன் பயணம் மேற்கொண்டார்.

மாரடைப்பு- காலமானார்
நன்மாறனுக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். நன்மாறன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications