சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பு- ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி காட்டிய சிபிஎம்-100 பேர் கைது!
மதுரை: முதுபெரும் இடதுசாரித் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதுரையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெற்ற சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகம், டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க இருந்தது. ஆனால் இதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்தது பெரும் சர்ச்சையானது. ஆளுநர் ரவின் இந்த போக்குக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ரவி பங்கேற்க உள்ளார். சங்கரய்யா விவகாரத்தில் ஆளுநரின் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைத் துணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிக்கிறேன். விடுதலைப்போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதே இதற்குக் காரணம். சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றமும் முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கோப்பில் கையெழுத்து இடாமல் இருக்கிறார். ஆளுநருக்கு சங்கரய்யா குறித்த வரலாறு தெரியவில்லை என்றால் கேட்டிருக்க வேண்டும் என்றார்.

மேலும் தந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் சங்கரய்யா. மேலும் பலபோராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் சிறை என 9 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார். தனது 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரை கவுரவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கியது. அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான கோப்பில் கையெழுத்துப் போட ஆளுநர் மறுத்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை அதனால் தான் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார் எனவும் அமைச்சர் பொன்முடி சாடியிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதுரை வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர் சிபிஎம் கட்சியினர். இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி காட்டியதாக 100க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications