போலீஸ் கஸ்டடியில் கைதி மரணம்.. போலீசார் தாக்கியதில் இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு! ஷாக்
மதுரை: மானாமதுரையில் காவல்துறை சட்டவிரோதமாக துன்புறுத்தியதில் கைதி இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 பேரை வாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் மார்ச் 6இல் இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைதானவர்களில் ஒருவர் ஆகாஷ். தப்பி ஓடும் போது பாலத்தில் இருந்து ஆகாஷ் கீழே குதித்ததில் அவருக்கு காயம் என காவல்துறை கூறியது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றபோது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 6-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஆகாஷ் என்பவர் மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆகாஷ் வெட்டியதில், ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணத்தின் போது அவருக்குத் திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவ உதவிக்கு முயற்சி செய்தும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குச் செல்லும் வழியில் கைதி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், ஆகாஷை அடித்து கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications