தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தென்மாநில எம்பிக்களின் எண்ணிக்கை குறையும்- பழ நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் தென்மாநில எம்பிக்களின் எண்ணிக்கை சிறுபான்மையாக திகழும் என தமிழ் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தபடுகிறது. தேர்தல் கால நேரத்தில் நாடாளுமன்றத்தை மத்திய அரசு அவசர அவசரமாக கூட்டி தொகுதி மறுவரையறை செய்யும் சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

delimitation parliament

அவை இருஅவைகளிலும் நிறைவேற்ற 3ல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

தேர்தல் காலத்தில் மறுவரையறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளும், மேற்குவங்கத்தில் 69 நாடாளுமன்ற தொகுதிகளும் இருக்கின்றன. இவர்கள் தேர்தல் வேலையில் இருக்கும் நேரத்தில் நினைத்ததை செய்து முடித்து விடலாம் என நினைக்கு ஒன்றிய அரசைக் கண்டிக்கிறேன்.

அவர்கள் மொத்தமுள்ள 543 தொகுதிகளை, 812 தொகுதிக்கு மேலாக நிர்ணயிக்கிறார்கள். வடக்கே மக்கள் தொகை அதிகமாக உள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை தமிழ்நாடு மாநிலம் முறையாக செயல்படுத்தியதால் இங்கு அளவோடு இருக்கிறது.

வட இந்தியாவில் அவற்றை பின்பற்றவில்லை. உதாரணமாக உத்தரபிரதேசத்தில் தற்போது 80 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அது மேலும் 40 தொகுதிகள் சேர்க்கப்படும்.

அதேபோல் பீகார், மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற இந்தி பேசுகின்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது. தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாகி அம்மன்றத்தில் சிறுபான்மையினராக திகழ்வர். இதை முதல்வர் வன்மையாக எதிர்த்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

இதை திட்டமிட்டு செய்வார்கள் என்றால் கட்சி வேறுபாடு பாராமல் தோளோடு தோள் நின்று எதிர்க்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வலுவிழந்து போகும். மத்திய அரசு பாரதிய மொழிக் குடும்பம் என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள தமிழ் மொழி உள்பட அனைத்து மொழிகளும் சமஸ்கிருத்தில் இருந்து தோன்றியவை என நிறுவ பார்க்கிறார்கள். மொழி அறிஞர்கள் இந்தியாவில் உள்ள மொழிகளை 5 மொழி குடும்பங்களாக பிரித்து இருக்கிறார்கள்.

ஆனால் இந்த அமைப்பு சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது என சொல்கிறார்கள். சமஸ்கிருதமே தாய்மொழி என உலகம் முழுவதும் பரப்புவதற்காக முயற்சிக்கிறார்கள். இத்தகைய பேராபத்துகளை மனதில் கொண்டு மக்கள் வரும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் பல்வேறு விதத்தில் குளறுபடிகள் இருந்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு என்று சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது தான்.

அதற்காகத்தான் புதிய நாடாளுமன்றத்தில் இருக்கைகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். பெண்களுக்கு நியாயமான 50 சதவீதம் கொடுத்தால் நாங்கள் வரவேற்போம். இந்தி பேசும் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற்று விட்டு நிரந்தரமாக ஆட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+