மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டுக… மீண்டும் போராட்டம்
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்டக்கோரி, தேவர் அமைப்பினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். டிஎன்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தேவர் அமைப்புகள் சார்பில் மதுரை மாநகரில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், கடந்த மாதம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு, நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட போராட்டங்களை தாங்கள் நடத்த போவதாக மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் பார்வர்டு பிளாஃக் கட்சி உள்ளிட்ட தேவர் அமைப்புகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று மதுரை ரயில் நிலையம் முன்பாக பார்வர்டு பிளாஃக் கட்சி, தென் இந்திய பார்வர்டு பிளாஃக் கட்சி போன்ற தேவர் சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த துவங்கினர்.

இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்திற்குள் முயன்று ரயிலை மறித்து போராட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் ரயில் மறியலில் ஈடுபடும் அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல அமைப்புகள், முற்றுகைப் போராட்டத்தில் வரக்கூடும் என்பதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து ரயில் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையே, தேவர் அமைப்புகளின் தலைவர்களை தற்சமயம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications