மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லேட்டா கொடுத்தாலும் கரெக்ட்டா கொடுப்போம்.. வாக்கு எண்ணிக்கை முடிவு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    லேட்டா கொடுத்தாலும் கரெக்ட்டா கொடுப்போம்: மதுரை மாவட்ட ஆட்சியர்!

    மதுரை: வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தருவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் தவறில்லாமல் துல்லியமாக தருவதில் உறுதியாக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    மதுரை மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான நாகராஜன் முன்னிலையில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

    Despite a slight delay in the vote count but results will be accurate: Madurai collector

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று பணியில் ஈடுபட உள்ள 300 அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சியின் போது தபால் வாக்குகளை எண்ணும் முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் முறை, VVPAT எந்திரம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்பிடும் முறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பயிற்சி அலுவலர் வழங்கினார்கள். பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்தபின் மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது, வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.

    Despite a slight delay in the vote count but results will be accurate: Madurai collector

    எக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்! எக்ஸிட் போல் முடிவுகளால் படுகுஷியில் எச்.ராஜா.. செம ஹாப்பி மோடில் டிவிட்!

    ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் சுவிதா என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு நுண் பார்வையாளர் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்.

    தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 4 மேஜைகள் அமைக்கப்படும். ராணுவ வீரர்களின் வாக்குகளை ETPPS முறையில் எண்ணுவதற்காக 2 மேஜைகள் அமைக்கப்படும்.

    வாக்கு எண்ணிக்கையின் போது துணை ராணுவம் உள்ளிட்ட காவல்துறையினர் 1000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு எண்ணும் மேஜை பணிகள் 300 ஊழியர்கள் உள்ளிட்ட 600 பேர் ஈடுபட உள்ளார்கள்.

    வாக்கு எண்ணிக்கையின் நிலவரங்களை வழங்க சற்று காலதாமதம் ஏற்பட்டாலும் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தவறு இல்லாமல் துல்லியமாக வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜன் தெரிவித்தார்.

    English summary
    Madurai collector cum Election officer Natarajan ensure that Despite a slight delay in the vote count but results will be accurate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X