மதுரையன்ஸ்.. நீங்கள் எதிர்பார்த்த அந்த குட் நியூஸ் வந்துவிட்டது.. தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தொடர்பாக முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

சமீபத்தில் மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர் விடப்பட்டது. கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டார்.

சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

மதுரை மெட்ரோ: மதுரை மெட்ரோ தொடர்பான பல்வேறு ஆலோசனைகள், சாத்தியக்கூறு சோதனைகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ளதை போன்ற மெட்ரோ மூன்று பெட்டிகளுடன் வர உள்ளது. இந்த பணிகள் 3 வருடம் நடக்கும். 2027ல் மெட்ரோ பணிகள் மதுரை முடிவு அடையும். இந்த மதுரை மெட்ரோவில் 5 km தூரத்திற்கு Underground System (2 tunnels )செயல்படுத்தப்படும். கோவில் இருக்கும் பகுதிகளில், மைய பகுதிகளில் பூமிக்கு அடியில் மெட்ரோ அமைக்கப்படும்.

Detailed Project Report of Madurai Metro project to be ready soon says sources

இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது என்று முதலில் கூறப்பட்டது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த முறை சுரங்க பாதையும் அமைக்கப்படும் கூறப்பட்டு உள்ளது. இந்த திட்டப்படி திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும்.

திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ செயல்படும்.

எத்தனை ஸ்டாப்கள்: மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும்.

இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெண்டர் ரிப்போர்ட்: சமீபத்தில் மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் மதுரை மெட்ரோவிற்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தோப்பூரில் 58 ஏக்கர் பரப்பளவில் மெட்ரோ ரயில் கிடங்கு அமைக்கும் இடம் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுகள்: இந்த மெட்ரோவிற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற வேண்டும். பல்வேறு இடங்களில் கடைகளை அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அனுமதியும் பெற வேண்டும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டு மெட்ரோவிற்கான ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது. அதாவது எங்கிருந்து எங்கே பாதை அமைக்கலாம்.. மேலே பாலம் அமைப்பது.. கீழே சாலைக்கு அடியில் அமைப்பது போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய ரிப்போர்ட் இந்த மாதம் அளிக்கப்பட உள்ளது. மேலும் பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யயப்பட உள்ளது. அவர்களுடன் ஒப்பந்தம் பெற வேண்டும். இதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இதனால் மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும்.

எப்போது வரும்: கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு மெட்ரோ ரயில்களின் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்று அரசு அறிவித்து உள்ளது.2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிகபட்சம் 5 வருடத்தில் கோவை - மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

இந்த சேவை 2028க்குள் ஏற்படுத்தப்பட்டால் மற்ற மாநிலங்களில் இருக்கும் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மெட்ரோ சேவை கோவை, மதுரையில் கொண்டு வரப்படும். நினைத்ததை விட இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது.சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+