அமைச்சர் ஐ.பெரியசாமி எப்படி இருக்கிறார்? மதுரை மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடலுக்கு படையெடுத்த திமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் நலம் விசாரிக்க வேண்டி திண்டுக்க மாவட்ட திமுகவினர் குவிந்து வந்தனர்.

ஏற்கனவே ''அப்பாவின் உடல்நலம் பற்றி பயப்பட ஒன்றுமில்லை, சர்க்கரை அளவு லேசாக குறைந்துவிட்டது. இது புதிதல்ல, அவ்வப்போது அவருக்கு வரும் பிரச்சனை தான். சுகர் லெவலில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வந்த மயக்கமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து அப்பா வீடு திரும்பி விடுவார்.'' என்று அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஒன் இந்தியா தமிழிடம் தெரிவித்திருந்தார்.

Dindigul DMK gathered at Madurai Meenakshi Mission Hospital! Minister I.Periyasamy health?

இதனை ''அப்பாவுக்கு லேசான மயக்கம் தான்! பயப்பட ஒன்றுமில்லை! பரபரப்பை தணித்த ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.!'' என்ற தலைப்பில் நாம் தனிச் செய்தியாகவே 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். ஆனாலும் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது கொண்டுள்ள அன்பு காரணமாக மனம் கேட்காமல் பல நிர்வாகிகள் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கே படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

Dindigul DMK gathered at Madurai Meenakshi Mission Hospital! Minister I.Periyasamy health?

இதென்னடா வம்பாக போச்சு என்று நினைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட திமுக துணைச் செயலாளர் நாகராஜன் மூலம் ஒரு மெசேஜ் சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு, ''நான் நலமுடன் இருக்கின்றேன். டெங்கு மற்றும் நோய் தொற்று பரவாமல் இருக்க என்னை மருத்துவனையில் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தனது லெட்டர் பேட் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மாவட்டச் செயலாளராக உள்ள போது அவர் மூலம் அவரது லெட்டர் பேடில் இந்த தகவலை அமைச்சர் ஐ.பி. வெளியிடாமல் மாவட்ட துணைச் செயலாளர் மூலம் வெளியிட்டது ஏன் என்ற விவாதமும் திண்டுக்கல் திமுகவில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+