என் நண்பன் வெங்கடேசன் கிட்ட இந்த இரண்டுமே அதிகமாகவே இருக்கு.. ஜெயிப்பான்.. சமுத்திரக்கனி பிரச்சாரம்
மதுரையில் சு வெங்கடேசனை ஆதரித்து இயக்குனர் சமுத்திரகனி பிரச்சாரம் செய்தார்.
மதுரை: "நேர்மையும் உண்மையும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். அது என் நண்பன் சு.வெங்கடேசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு" என்று இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை சிபிம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பலர் கூட்டணி கட்சி சார்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் சமுத்திரகனி தனிப்பட்ட முறையில் வந்து வெங்கடேசனுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
"முதலில் இங்கு நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக வரவில்லை. என்னுடைய மிக நெருங்கிய நண்பர் வெங்கடேசன். அதற்காகதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன். கட்சிகளுக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்ட என் நண்பனுக்காக வந்திருக்கிறேன்.

தலையெழுத்து
பரபரப்பான தேர்தல் களத்தை சந்திக்கிறோம். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது தேர்தல். முதல் தலைமுறை வாக்காளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் கவனமா வாக்களியுங்கள். நீங்கள் தான் ஒட்டு மொத்த தலை எழுத்தையும் மாத்த போறீங்க.

நாகரீகம்
பரபரப்பான தேர்தல் களத்தை சந்திக்கிறோம். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது தேர்தல். முதல் தலைமுறை வாக்காளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் கவனமா வாக்களியுங்கள். நீங்கள் தான் ஒட்டு மொத்த தலை எழுத்தையும் மாத்த போறீங்க.

எழுத்து
மதுரை வரலாற்றில் காவல் கோட்டத்தில் சொன்ன மாமனிதன், வேள்பாரி போன்றவை எல்லாம் தொட முடியாத விஷயங்கள். இதைப்பற்றி எழுதுவதைப்பற்றி யாரும் நினைச்சுகூட பார்க்க முடியாது. ஆனால் அவற்றினை எளிமையாக அனைவருக்குமே புரிய வைத்தவர் வெங்கடேசன்.

நேர்மை
இப்படி ஒரு அற்புதமான மனிதரை தேர்ந்தெடுத்தால் மதுரைக்கு மிகப்பெரிய மாற்றம் வரும். அடுத்த தலைமுறையும் கட்டாயம் மலரும். வெறும் பணத்தை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது. நேர்மை இருக்க வேண்டும், உண்மை இருக்க வேண்டும் அது வெங்கடேசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.

மாற்றம்
எதிரே இருப்பவர்கள் பற்றி நான் எந்த குறையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம ஆதரிப்பவர்களை வரவேற்றால் அது போதும். அவர்கள் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications