நாங்க புதுஸ்ஸா... திமுக கவுன்சிலர்களுடன் ஜோடி போட்டு வந்த அமமுக கவுன்சிலர்கள்.. மேலூரில் பரபரப்பு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் திமுக கவுன்சிலர்கள் உடன் அமமுக உறுப்பினர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் திமுகவினர் 9 இடங்களிலும் அமமுகவினர் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இவர்கள் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றாக தனி வேனில் மதுரை மேலூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.
11 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில் 10.30 மணிக்குத்தான் கவுன்சிலர்களை உள்ளே விடுவோம் என கூறியதால் அமமுகவும் திமுகவும் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்தனர்.
அலுவலரை வரச்சொல்லி அமமுகவினர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து வெற்றி பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications