திமுக குழு அமைக்கும்னு 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. கொந்தளிக்கும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
மதுரை: திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கும் என்று 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகளுக்கு மரியாதை அளிப்பதாக 36 நாட்களாக காத்திருப்பதாக கூறிய மாணிக்கம் தாகூர், பேச்சுவார்த்தை குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமை இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழுவையே அமைக்காமல் இருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது குழு அமைப்பதாக ஸ்டாலின் கூறி இருந்தார்.

தாமதம் செய்யும் திமுக
ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்னரும் திமுக தலைமை இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் இருக்கிறது. இருப்பினும் கூட்டணி கட்சிகளுடன் திமுக சீனியர் நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு குழுவை அமைக்க திமுக வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக பார்க்கப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் பேட்டி
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. எல்&டி நிறுவனம் விரைவில் கட்டுமான பணிகளை முடிப்பேன் என்று கூறி இருக்கிறார்கள்.
திமுக பேச்சுவார்த்தை குழு
அதேபோல் டிசம்பர் 3ஆம் தேதியே தமிழக காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 36 நாட்களாக திமுக குழு அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம். நாங்கள் திமுக கூட்டணியுடன் பயணித்து வருகிறோம்.
மரியாதை முக்கியம்
திமுக கூட்டணியில் உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. தமிழக காங்கிரஸில் இருந்து 39 தலைவர்களை டெல்லி தலைமை அழைத்து தனித்தனியாக கருத்து கேட்டது. எங்களின் கருத்துக்களை உரியவர்களிடம் கட்சித் தலைமை கூறி இருக்கும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்காது.
பிரதமரின் மதுரை வருகை
அதேபோல் தமிழ்நாட்டிற்காவது பிரதமர் மோடி பயமின்றி வருகிறார். அதிமுக கூட்டணியை அமித்ஷா 3வது இடத்திற்கு தள்ளிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி சீமானுடன் போட்டி போட்டு வருகிறது. அந்த போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மதுரை வரும் போதாவது மதுரை எய்ம்ஸின் உண்மை நிலை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications