ITயை விடுங்க.. பரோட்டா போட இவ்வளவு மவுசா.. அதுவும் கோச்சிங் சென்டர் வேறயா? மதுரை மதுரைதான்!
மதுரை: மதுரையில் பரோட்டா கற்றுக் கொடுப்பதற்கென ஒரு மையம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? 10 நாட்களில் நீங்கள் ஒரு நல்ல பரோட்டா மாஸ்டராகலாம்!
மதுரைன்னாலே மல்லி! விடிய விடிய சுடச்சுட கிடைக்கும் உணவுக் கடைகள், கோயில்கள், சித்திரை திருவிழாதான் நினைவுக்கு வரும். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை என்ற வரலாற்றுச் சிறப்பும் உண்டு.

இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு பள்ளி உள்ளது. அதுதான் செல்பி பரோட்டா ஸ்கூல். இங்கு 10 நாட்களில் எல்லா வகையான பரோட்டாக்களையும் போடுவதற்கு சொல்லித் தருகிறார்கள். அதிலும் ஹாஸ்டல் வசதியும் உண்டு என்கிறார்கள்.
இதுகுறித்து விரிவான விவரங்களை இந்த மையத்தின் உரிமையாளர் முகமது காசிம் (31) என்பவரை ஒன் இந்தியா தமிழ் சார்பில் அணுகினோம். அவர் கூறுகையில் நான் பிஏ தமிழ் படித்துள்ளேன். மதுரை செல்பி பரோட்டா கோச்சிங் சென்டர் என்ற பரோட்டா மாஸ்டருக்கான பிரத்யேக பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

எங்களிடம் 2000 முதல் 2500 பேர் வரை பயிற்சி பெற்றுள்ளார்கள். 10 நாட்கள் வகுப்புகளுக்கு வந்தாலே போதும், காலையில் 2 மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் என ஒரு நாளைக்கு 4 மணி நேரம் செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுக்கிறோம். இந்த பயிற்சியின் போது பன் பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா, கொத்து பரோட்டா, மலபார் பரோட்டா, மலேசியன் பரோட்டா, சிங்கப்பூர் பரோட்டா, மதுரை ஸ்டைல் சால்னா, கிரேவி, தோசை வகைகள், சப்பாத்தி, புல்கா, கோதுமை பரோட்டா ஆகியவற்றை முழுவதுமாக செயல்முறையுடன் சொல்லிக் கொடுத்துவிடுவோம்.
சைனீஸ் வகை: இது போக சிக்கன் ரைஸ், சிக்கன் 65, சிக்கன் நூடுல்ஸ், சில்லி பரோட்டா, சில்லி சிக்கன் ஆகிய சைனீஸ் உணவு வகைகளையும் சொல்லித் தருகிறோம். இந்த சைனீஸ் உணவு வகைகளை கற்க 7 நாட்கள் வந்தால் போதும். பரோட்டா, சைனீஸ் உணவுகளை சேர்ந்து கோர்ஸாக எடுத்தால் 12 நாட்களில் சொல்லிக் கொடுத்துவிடுவோம். வெளியூர், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தொழில் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது.

பரோட்டா வகுப்புக்கு ரூ 4000 கட்டணமாக வாங்குகிறோம். ஹாஸ்டலில் தங்க ரூ 2000 கட்டணம். சாப்பாடு அவர்கள் வெளியே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இந்த 4000 ரூபாயில் மாவு, எண்ணெய் உள்ளிட்டவைகளை நாங்களே கொடுத்து பழக வைக்கிறோம். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறோம்.
ஹோட்டலில் ஆரம்ப ஊதியம்: இங்கு முடித்து விட்டு ஒரு ஹோட்டலில் ஆரம்ப ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ 500 க்கு நாங்களே அவர்களை அனுப்புகிறோம். பிறகு அனுபவத்தை பெற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு ரூ 1000, ரூ 1500 பெறலாம். எங்களிடம் பயின்றுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் ரூ 40 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் வரை ஊதியம் வாங்குகிறார்கள்.

சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோருக்கு பயிற்சி கொடுத்து ஆலோசனைகளையும் கொடுக்கிறோம். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வீடியோ காலில் வகுப்பு எடுத்துகிறோம். அவர்களுக்கு கட்டணமாக ரூ 10 ஆயிரம் வசூலிக்கிறோம். மதுரையில் நாங்கள் சொல்லிக் கொடுப்பது 20 பேருக்கு ஒரே நேரத்தில் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் ஆன்லைனில் தனியாக சொல்லிக் கொடுப்பதால் ரூ 10 ஆயிரம் வசூலிக்கிறோம்.
பரோட்டா மையம் தொடங்கியது ஏன்: நாங்கள் 3 தலைமுறையாக ஹோட்டல் நடத்தி வந்தோம். எங்கள் கடைக்கு ஒரு நாளைக்கு ரூ 1000 ஊதியம் தர ரெடியாக இருந்தாலும் பரோட்டா மாஸ்டர் கிடைக்கவில்லை. சிலருக்கு பரோட்டா போட சொல்லிக் கொடுத்தோம். அப்போது நாங்கள் சொல்லிக் கொடுப்பது பலருக்கு தெரிந்து எங்களிடம் கற்றுக் கொள்ள வந்தனர். அதனால் பரோட்டா சொல்லித் தரும் வகுப்புகளை முழு நேரமாக எடுத்து வருகிறோம். என்னுடன் 4 மாஸ்டர்களையும் பணிக்கு வைத்துள்ளோம். முதலில் டவல் எக்ஸர்சைஸ், கைக்கு எக்ஸர்சைஸ், மாவு பிசைதல், உருண்டை பிடிப்பது, எப்படி வீசுவது, எந்த பரோட்டாவுக்கு எப்படி வீச வேண்டும் என்றெல்லாம் சொல்லித் தருகிறோம். தொழிலை நேர்த்தியுடன் சொல்லித் தருகிறோம்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு: எங்களிடம் பெண்களும் கற்றுக் கொள்கிறார்கள். இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை விற்கும் ஹோட்டலை பெண்கள் நடத்துவார்கள். பரோட்டாவுக்கென ஆள் வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் எங்களிடம் வந்து கற்றுக் கொள்வார்கள். கடந்த ஆண்டு ஒரு பெண் திருமணமாகி சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு எங்களிடம் பரோட்டா போட கற்றுக் கொண்டார். அங்கு இது போல் ஒரு தொழில் செய்யலாமே என்பதால் வகுப்புகளுக்கு வந்து கற்றுக் கொண்டார்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் எங்களிடம் ஆன்லைனில் படித்து சிறியதாக ஹோட்டலை நடத்தி வருகிறார்கள். தற்போது மாதத்திற்கு 250 பேர் வரை பயிற்சி எடுத்து வருகிறார்கள். இவ்வாறு முகமது காசிம் தெரிவித்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications