மதுரை குலுங்க குலுங்க.. இதுதான் ஜல்லிக்கட்டு அரங்கு.. வெறும் 9 மாத பிரம்மாண்டம்.. அழகு அலங்காநல்லூர்
திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை தருகிறார். அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த அரங்கத்தை காலை 10 மணிக்கு முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

இன்று திறப்பு விழா என்பால், ஜெகஜோதியாக மின்னுகிறது மைதானம்.. மொத்தம் 66 ஏக்கர் நிலத்தில் 16 ஏக்கரில் இந்த மைதானம் அமைந்துள்ளது. வெறும் 9 மாதங்களில் மைதானம் கட்டப்பட்டுள்ளது.. அரங்கத்தின் நுழைவாயிலில் 4 பிரம்மாண்ட தூண்கள் உள்ளன.. இதேபோல 3 நுழைவாயில்கள் அரங்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது..
வசதிகள்: 16,921 சதுர அடி கொண்ட தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடமும், காளைகள் பரிசோதனைக்கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல, முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கேலரி வசதி: இந்த மைதானத்தில் ஒரேநேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.. இதில், தரை தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என 3 தளங்கள் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதல் தளம் 9,020 சதுர அடியிலும், இரண்டாவது தளம் 1,140 சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது...
கீழ்த்தளத்தில்தான் அட்மின் ஆபீஸ் மற்றும் வாடிவாசலை அடுத்து செய்தியாளர்களுக்கான அறைகள், ரிஜிஸ்ட்ரேஷன் ரூம், கடைகள், லாக்கர் அறை, டார்மெட்ரி என அனைத்தும் அமைந்துள்ளன. விஜபி சூட், டைனிங் ஹால், டார்மெட்ரி உள்ளன. 2ம் இரண்டாம் தளத்தில் ஸ்டோர் ரூம், உபகரணங்களை வைக்கும் அறை, அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் பச்சை பசேல் என இயற்கை எழில் காட்சிகள் உள்ளன..
குடிநீர் தேவை: குடிநீர் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது... அதற்கு பக்கத்திலேயே, போட்டியில் பங்கேற்கும் காளைகளை கட்டிவைப்பதற்காகவே பிரத்யேகமான இடம் அமைக்கப்பட்டுள்ளது. பிறகு, காளைகள் வாடி வாசலுக்கு வரிசையாக வருவதற்கான வழியும் செய்து தரப்பட்டுள்ளது. இவை அனைத்துமே கான்கிரீட் கூரைகளால் அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு முன்னதாக வாகனங்களை நிறுத்துவதற்கான மிகப் பெரிய வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. கார், பைக்குகள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, முக்கிய சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டேடியம்: இதுவரை கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக்கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும், எப்போது கீழே விழுவோ என்றுகூட தெரியாமலும், பதற்றத்துடனேயே விளையாட்டு போட்டியை கண்டுகளித்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாகி உள்ளது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications