மதுரை வாழைத்தோப்பில் கலைச்செல்வி.. பின்னாடியே போன இளங்கோ.. மண்டை காய்ந்த மானாமதுரை.. சபாஷ் போலீஸ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பிறகு, முக்கிய கொலையாளியை போலீசார் கண்டுபிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் 25 நாட்களாக இரவு பகலாக புலன் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில், கடந்த ஜூலை 10-ம் தேதியன்று பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலைமான் போலீசார் நேரிலேயே தோப்புக்கு சென்று, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

Madurai Manamadurai Woman

அறிகுறி: ஆனால், இறந்த பெண் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை.. இறந்த பெண் குறித்தான தகவல்களும் எதுவுமே தெரியவில்லை.. அதனால், இறந்த பெண்ணின் போட்டோவை, எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதுதான் உயிரிழந்தவர் சிவகங்கை இடைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், 45 வயதான கலைச்செல்வி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் இந்த கொலையை யார் செய்தார்கள்? ஏன் நடந்தது? என்ற அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்கினார்கள்.. பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, இவரை கொன்றவர் குறித்த எந்த துப்புமே போலீசாருக்கு கிடைக்கவில்லை.

தனிப்படை: இதனால், இந்த வழக்கு மறுபடியும் சவாலாக போலீசாருக்கு உருவெடுத்தது. இதற்கு பிறகுதான், மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் 2 தனிப்படை களமிறக்கப்பட்டது..

இந்த தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருக்கும் ஒரே சாய்ஸ் கலைச்செல்வியின் செல்போன்தான்.. எனவே, அவரது செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில், 100க்கும் மேற்பட்ட போன் நம்பர்கள் மட்டுமே இருந்தன.

போன் நம்பர்: அதனால், இந்த போன் நம்பர்களுடன், கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர் அவருடன் பழகியவர்கள், சொந்தக்காரர்கள் என கிட்டத்தட்ட 10,000 மேற்பட்ட செல்போன் நம்பர்களை ஆய்வு செய்யும் நிலைமை போலீசாருக்கு ஏற்பட்டது.

இந்த 10 ஆயிரம் செல்போன்களை ஆராய்வதற்கே 23 நாட்களாகிவிட்டது.. இதனால் ஒரு கட்டத்தில் சோர்ந்தே போய்விட்டார்கள்.. எனினும், மாவட்ட எஸ்பி. அரவிந்தன், தனிப்படையினரை அடிக்கடி சந்தித்து, இந்த கொலை வழக்கை பொறுமையாக கையாண்டால், நிச்சயம் கொலையாளி சிக்குவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டினார்.

சிசிடிவி கேமரா: இதற்கு பிறகு தனிப்படை போலீசார், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய துவங்கினார்கள்.. கொலை நடந்த தோப்பு பகுதி உட்பட அந்த சுற்றுவட்டாரம் முழுக்க பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்ததில், எந்த துப்புமே கிடைக்கவில்லை.. ஆனால், ஒரே ஒரு பைக் மட்டும் அந்த வழியாக சல்லுன்னு பறந்தது பதிவாகியிருந்தது.

அதுமட்டுமலல, அதே பைக் கொஞ்ச தூரம் சென்றதுமே தெப்பக்குளம் பகுதியில் நுழைந்ததும் பதிவாகியிருந்தது.. அந்த பைக் தெப்பக்குளம் பகுதியில் நுழைந்த நேரத்தில்தான், கலைச்செல்வியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது.

மாற்றுத் திறனாளி: எனவே, கலைச்செல்வி செல்போனில் பதிவாகியிருந்த அந்த செல்போன் நம்பர் குறித்த போலீசார் விசாரித்தனர்.. பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரின் செல்போன் நம்பர் என்பது தெரியவந்தது.

இதற்கு பிறகு, மாற்றுத்திறனாளியின் உறவினர் அளித்த அடையாளத்தின் அடிப்படையில், பைக்கில் சென்றவரும், செல்போனில் பேசியவரும் ஒரே நபர் என்பது உறுதியானது. அதற்கேற்றவாறு, தெப்பக்குளம் பகுதிக்கு கலைச்செல்வி ஆட்டோவில் வந்ததாகவும், அவரை பின்தொடர்ந்து கொலையாளி சென்றதாகவும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

யாரிந்த இளங்கோவன்: இதற்குபிறகு, தெப்பக்குளம் பகுதிக்கு சென்ற ஆட்டோ, பைக் இரு வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணை நடந்தது.. இறுதியில் கொலையாளி சிக்கினார்.. மானாமதுரை அன்னியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர்தான், கலைச்செல்வியை கொன்றது உறுதியானது.. கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார் இளங்கோவன்.

கலைச்செல்வி இடைக்காட்டூர் பகுதியில் கடை வைத்திருந்ததால், அந்த வழியாக தினமும் வங்கிக்கு செல்வாராம் இளங்கோவன். அப்போதுதான், 5 வருடத்துக்கு முன்பு கலைச்செல்வி பழக்கமாகி உள்ளார்.

வட்டி பணம்: கலைச்செல்விக்கு 6 லட்சம் ரூபாய், பிற நபர்களின் மூலமாக வட்டிக்கு கடன் வாங்கி தந்தாராம் இளங்கோவன். ஆனால், கலைச்செல்வி அதற்கான வட்டி எதுவுமே கட்டவில்லையாம். கலைச்செல்வி கட்ட வேண்டிய வட்டியையும், இளங்கோவனே கட்டி வந்தாராம். இப்படி கலைச்செல்விக்காக மாத மாதம் வட்டி கட்டி வந்தால், இளங்கோவன் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சம்பளப்பணம் ஏன் குறைகிறது? என்று கேட்டு தகராறு வெடித்துள்ளது..

அசல் பணம்: அசல் பணத்தை கேட்டும் கலைச்செல்வி தராமல் இழுத்தடித்ததால், கலைச்செல்வி மீது ஆத்திரம் அதிகமாகிவிட்டதாம். அதனால், சம்பவத்தன்று போன் செய்து வரவழைத்து தோப்புக்குள் வைத்து கலைச்செல்வியை கொன்றுவிட்டதாக இளங்கோவன் வாக்குமூலம் தந்துள்ளார்..

கடந்த 25 நாட்களாகவே, போலீசாருக்கு இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து வந்தது.. எந்தவொரு க்ளூவும் சரியாக கிடைக்காத நிலையில், ஒரே ஒரு செல்போன் அழைப்பை வைத்து, முக்கிய குற்றவாளியை 25 நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+