"டச் பண்ணாதீங்க".. அடங்காத ஆசையால், தடுமாறிய புத்தி.. ரோட்டில் "அசிங்கப்பட்டு" சிக்கிய போலீஸ் வசந்தி
மதுரை: மாஜி பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியை, நடுரோட்டில் சினிமா பாணியில் சேசிங் செய்து கைது செய்துள்ளது காவல்துறை.. அந்த பெண் போலீஸ் செய்த அட்டகாசம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
யார் இந்த வசந்தி தெரியுமா??? நாகமலை வசந்தி என்பார்கள் இவரை.. நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர்
ஆரம்பத்தில் நேர்மையான போலீஸாக வேலை பார்த்து வந்துள்ளார். சுறுசுறுப்பாகவே பணியில் இருப்பாராம்.. ஆனால் நாள் ஆக ஆக பணத்தின் மீது வசந்திக்கு ஆசை அதிகரித்துள்ளது..

அப்பாவிகள்
இதனால் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.. குறிப்பாக அப்பாவிகள் யாராவது பணம் கொண்டு போனால், விசாரணை என்ற பெயரில் அவர்களை மடக்கி பணத்தை பறித்து வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கெல்லாம் முக்கிய காரணம், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் துணிந்து ஸ்டேஷன் வரை வந்து, புகார் சொல்ல மாட்டார்கள் என்று வசந்தி பலமாக நம்பியதுதான்... அதற்கேற்றபடி யாரும் வசந்தி மீது புகார் தராமல் ஒதுங்கி போயுள்ளனர்.. இது வசந்திக்கு சாதகமாகிவிட்டது.. ஆனால் 2 வருடங்களுக்கு, அதாவது 2021-ல் அர்ஷத் என்பவர் மூலம் வசந்திக்கு "ஆப்பு" ரெடியானது..

டப்ளிங்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் இந்த அர்ஷத்.. இவர் கைப்பை தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். வில்லாபுரத்தில் ஒரு பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார்.. தனியாக தொழில் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.. அதற்காக உறவினர்களிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.. ஆனால் அந்த பணம் போதாது என்பதால், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் கேட்டுள்ளார்.. அதற்கு பாண்டி, 10 லட்சம் ரூபாய் எடுத்து வா, அதை, இரட்டிப்பு செய்து தருகிறேன் என்று ஆசைக்காட்டி வரவழைத்துள்ளார்.. இது தெரியாமல் அர்ஷத், ஒரு பையில் 10 லட்சம் வைத்துக்கொண்டு, நாகமலை புதுக்கோட்டைக்கு சென்றார்.. பாண்டியை பார்த்து கடனுதவி கேட்டார்.

வசந்தி வசந்தி
அதற்கு பாண்டி, "வீட்டில் போய் பணம் எடுத்து வரும்வரை அங்கேயே காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு போனார். ஆனால், பாண்டி, வசந்திக்கு போனை போட்டு, 10 லட்சத்துடன் அர்ஷத் என்பவர் வந்திருக்கும் விஷயத்தை சொல்லிவிட்டார்.. இன்ஸ்பெக்டர் வசந்தியும், ஸ்பாட்டுக்கு வந்து, விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அர்ஷத், பாண்டி, அவரது நண்பர் கார்த்திக் ஆகியோரை ஜீப்பில் அழைத்துச் சென்றிருக்கிறார்.. கொஞ்ச தூரம் சென்றதும் ரூ.10 லட்சத்தை வசந்தி பறித்துக்கொண்டு, அர்ஷத்தை இறக்கிவிட்டாராம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ஷத், தன்னுடைய பணத்தை திரும்பி தருமாறு கேட்டிருக்கிறார்.

ஸ்கூல் பை
அதற்கு வசந்தி "பணமா? எங்கே இருந்தது? என் பிள்ளை சத்தியமா உன்கிட்ட இருந்த பையில் ஸ்கூல் நோட்டு புக்தான் இருந்தது... பணமே இல்லையே.. இப்படியே நச்சரித்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்" என்று மிரட்டவும்தான், மாவட்ட எஸ்பி வரை சென்றுள்ளார் அர்ஷத். மாவட்ட எஸ்பி பாஸ்கரனிடம் அர்ஷத் புகார் செய்திருக்கிறார்... இதையடுத்து எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் போலீசார் விசாரணையில் குதித்தனர்.. இதற்காகவே தனி டீம் களமிறக்கப்பட்டது.. ஆனால், விஷயத்தை கேள்விப்பட்ட வசந்தி அதற்குள் எஸ்கேப் ஆகிவிட்டார்.. ஆனாலும், வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. இறுதியில், வசந்தியை போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த வசந்தி ஒருநாள் கைதானார்.

கண்டிஷன் பெயில்
பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டார். இந்நிலையில், வசந்தி தன்னுடைய வழக்கு தொடர்பான சாட்சிகளை மிரட்டியதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், இது தொடர்பாக மிரட்டுக்குள்ளான நபர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கவும், அதன்பேரில் அவர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. தென் மண்டல ஐஜி அஸ்ராக கார்க் ஆலோசனையின் பேரில், இந்த வழக்கை அவரை கைது செய்ய திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. துரை ஊமச்சிகுளம் பகுதியில் வசித்து வருகிறார் வசந்தி.. அவர், மதுரை புறவெளிப் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் அருகே காரில் வசந்தி சென்றுக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், அவரை போலீசார் பிடிக்க முயன்றனர்..

விடுங்க விடுங்க
ஆனால், போலீசாரை பார்த்ததுமே, காரை வேகமாக ஓட்டியுள்ளார் வசந்தி.. எனினும், பின்னாடியே சேசிங் செய்து, வசந்தியை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.. காரை வழிமறித்து அவரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால், வசந்தி இறங்க மாட்டேன் எனக்கூறி காரிலேயே பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார்.. பிறகு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.. அதற்குள் பெண் போலீஸ் அதிகாரிகள், குண்டுகட்டாக ஓடிவந்து வசந்தியை தூக்கியும், தரதரவென இழுத்துச்சென்றும் கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். வசந்தி செய்த அட்டகாசத்தினால், அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. வசந்தியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications