அன்று விட்டதை இன்று முடித்த அமித்ஷா.. கவனம் பெற்ற மத்திய உள்துறை அமைச்சரின் புதுக்கோட்டை வருகை
மதுரை: பிரதமர் மோடி இன்று தமிழகம் வரஉள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகம் வந்து புதுக்கோட்டை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இரு தலைவர்களின் வருகை காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியபோது, "பூரி ஜெகந்நாதர் கோயிலில் உள்ள பொக்கிஷ அறை சாவி தொலைந்து போய்விட்டதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விமர்சித்திருந்தார். ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரான வி.கே.பாண்டியனை மறைமுகமாக கூறி இவ்வாறு விமர்சித்திருந்தார் பிரதமர் மோடி.

தமிழ்நாடு: அதேபோல, தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருந்ததாக கூறி தமிழக தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். வாக்குக்காக தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எச்சரித்திருந்தார்.
"தமிழர்களை திருடர்கள் என்று மோடி விமர்சிப்பதா? ஜன்னி கண்ட நோயாளிபோல் பிரதமர் பிதற்றுவதா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியிருந்தார்...
தமிழ்ச்சமூகம்: தமிழ்ச் சமூகத்தை கொச்சைப்படுத்தும் உரிமையை யார் பிரதமர் மோடிக்குத் தந்தது? உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் மோடி என்று மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவும் கொந்தளித்திருந்தார்.
இதில், இவர்கள் அனைவரையும்விட, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை ஒருமேலே போய்விட்டார். "உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி , இருவருமே இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், தமிழக பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தினார் செல்வப்பெருந்தகை.
இறுதிக்கட்டம்: இப்படி தமிழக தலைவர்கள் அனைவருமே கொந்தளித்துள்ள நிலையில்தான், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரண்டு பேருமே இன்று தமிழகம் வருகிறார்கள். தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இங்கே கன்னியாகுமரிக்கு ஏன் வந்து பிரதமர் தியானம் செய்ய வேண்டும்? திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகின்றன.
அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று தமிழகம் வந்தார். . புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
திருமயம்: திருமயத்தில் அமைந்துள்ள பைரவர் கோயில் அதன் அருகே அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். இந்நிலையில் தான் அமித்ஷாவின் கோவில் தரிசனம் பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அண்ணாமலை, ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள சத்திய கிரீஸ்வரர் கோவில் மற்றும் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்றார். நம் மக்களின் காவல் தெய்வமான பைரவரின் அருள் பெற்றார். ஏப்ரல் 12ம் தேதி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா இந்த கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மோசமான வானிலையால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஆனாலும் கூட தேர்தல் முடிவதற்குள் இந்த கோவிலுக்குச் சென்று பைரவரின் ஆசிர்வாதத்தைப் பெறுவேன் என்று முடிவு செய்து இன்று தரிசனம் செய்தார். அவரது இன்றைய வருகை நம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் எவ்வாறு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது'' என பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
திருமயத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் திருச்சிக்கு வந்து மாலை 5.25 மணிக்கு தனி விமானத்தில் திருப்பதி சென்றார். இதையொட்டி திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. மத்திய, மாநில போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தனர். அமித்ஷா வருகையின்போது விமான நிலைய பகுதிகயில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ரத்தான நிகழ்ச்சி: கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதியே, புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியவாகீஸ்வரர் கோவிலுக்கு அமித்ஷா வருவதாக கூறப்பட்டது.. சாமி தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அந்தப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. எனவே, இன்றைய தினம் சுவாமி தரிசனம் செய்ய அவர் புதுக்கோட்டை வந்தார்.
இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், இன்றையதினம் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
கருப்பு கொடி: "ஒடிஷா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழர்களை களவாணிகளாக சித்தரித்திருந்தார் மோடி. அதேபோல வட இந்தியர்களை தமிழர்கள் இழிவுபடுத்துவதாக கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் அமித்ஷா. இவர்கள் இருவரும் 30-ந் தேதி, தமிழகத்துக்கு வருகிறார்கள்.. இந்த இருவருக்கும் தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், மதுரையில் இன்று (மே 30-ந் தேதி) அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்" என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications