அந்த ஒரு வார்த்தைதான் காரணம்.. மதுரை ஜோடி எடுத்த முடிவு.. ஊர் திருவிழாவிற்காக செய்த காரியம் பாருங்க
மதுரை: மதுரை மாநகரின் ஊமச்சிகுளம் பகுதியில் நிகழ்ந்த அந்த சம்பவம், ஒட்டுமொத்த ஊரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. காதலித்து கரம் பிடித்து, வாழ்வின் இன்ப துன்பங்களை ஒன்றாக பகிர்ந்து கொண்ட ஒரு இளம் தம்பதி, மரணத்திலும் ஒன்றாகவே இருக்க முடிவு செய்த அப்படியொரு முடிவை எடுத்து விட்டார்கள்.. என்ன நடந்தது மதுரையில்? யாரிந்த தம்பதி?
மதுரை ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த அருண் (28) என்பவருக்கும், செல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரியா (26) என்பவருக்கும் கடந்த இரண்டு வருஷத்துக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்த அருண், தன் உழைப்பால் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி வந்தார்.

மதுரை தம்பதி
பிரியாவும் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது வாழ்க்கை தொடக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவே போனது.
ஆனால் விதி விபத்தின் ரூபத்தில் இவர்கள் வாழ்க்கையில் விளையாடத் தொடங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது கால் எலும்பு கடுமையாக முறிந்தது.
மெடிக்கல் செலவுகள்
ஆபரேஷன், மற்றும் தொடர் சிகிச்சைக்குப் பிறகும்கூட அவரால் பழையபடி ஆட்டோ ஓட்டவோ அல்லது கடினமான வேலைகளுக்கு செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், குடும்பத்தின் நிதி நிலைமை மோசமடையத் தொடங்கியது.
தன்னுடைய மெடிக்கல் செலவுகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்த கவலை அருணைத் தீவிர மன உளைச்சலுக்குத் தள்ளியது. போதாக்குறைக்கு தங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற ஏக்கமும் இவர்களின் மன அழுத்தத்தை அதிகரித்தது.
தன்னுடைய உடல்நிலையால் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாக உணர்ந்த அருண், வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தன் மனைவி பிரியாவிடம் அடிக்கடி புலம்பி வந்தாராம்..
செத்து போயிடலாம்
ஆனால், அருண் இல்லாத உலகத்தை கற்பனை செய்யக்கூட முடியாத பிரியா, "உங்களை விட்டுவிட்டு என்னால் உயிர் வாழ முடியாது, நானும் உங்க கூடவே வந்துடறேன், ஒன்றாக செத்து போயிடலாம்" என்று சொன்னாராம்..
காதலில் இணைந்தவர்கள், மரணத்திலும் இணைந்திருக்கலாம் என்ற அந்த விபரீத முடிவை இருவரும் ஒருமனதாக எடுத்தனர். கடந்த புதன்கிழமை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இளம் தம்பதி
நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து ஊமச்சிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அந்த இளம் தம்பதி பிணமாகத் தொங்கிய காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த ரூமை சோதனையிட்டனர்..
கடைசி கடிதம்
அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் "எங்கள் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களின் கடைசி ஆசையாக, எங்களை ஒரே இடத்தில் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள். மேலும் எங்களுடைய இறப்பை காரணம் காட்டி ஊர் கோவில் திருவிழாவை நிறுத்தி விடாதீர்கள்" என்று மிகவும் உருக்கமாக எழுதியிருந்தனர்.
இவர்களின் இந்த கடைசி ஆசை மற்றும் ஊர் திருவிழாவின் மீது அவர்கள் காட்டிய அக்கறை அங்கிருந்த போலீசாரையே கண்கலங்க செய்துவிட்டது.. வறுமையும் உடல்நலக் குறைவும் ஒரு அழகான காதல் வாழ்வை எப்படிச் சிதைத்துள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்தத் தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்...!!!












Click it and Unblock the Notifications