மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா?.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பஞ்சத்தை தீர்க்க விஞ்ஞான ரீதியில் யோசிங்க - கார்த்தி சிதம்பரம்

    மதுரை: ஜெபம், யாகம் நடத்தினால் மட்டும் குடிநீர் பஞ்சம் தீர்ந்து விடாது. விஞ்ஞான ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு நீட் தேவை இல்லை என்பதில், எங்களுடைய கூட்டணி, எங்களுடைய கட்சி மிக தெளிவாக உள்ளது.

    ஆணவ படுகொலை மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சூப்பை அருந்தினால் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை செய்தித்தாளில் பார்த்தேன். இதெல்லாம் நடக்கிறது என்றால் மதவாத சக்திகள் தலைதூக்கும் என்று தெரிகிறது. மதவாத சக்திகளுக்கு ஆதரவாக, மாநில அரசு இருக்கிறது என்ற தைரியத்தில் தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.

    அத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்!அத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்!

    தீர்வு காண வேண்டும்

    தீர்வு காண வேண்டும்

    தொடர்ந்து பேசிய அவர், குடி தண்ணீர் பிரச்சினை இல்லை என்றால், ரயில் மூலம் தண்ணீர் ஏன் கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். குடிநீர் பிரச்சினை தற்போது தமிழகத்தில் இருக்கிறது. அது தீர்வு காண வேண்டும் என்றால், பெரிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு காவிரி - வைகை குண்டாறு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

    கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

    திட்டம் செயல்படுத்துவதற்கு அனைத்து அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை நடத்துவதற்கு மாநில சர்கார், மத்திய சர்காரை அணுகி தேவையான நிதியை வாங்கி, அந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது போன்ற பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை அமல் படுத்தினால் தான் இந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    விஞ்ஞான ரீதியாக தீர்க்க வேண்டும்

    விஞ்ஞான ரீதியாக தீர்க்க வேண்டும்


    ஜெபம் , யாகம் நடத்துகிறோம். எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது விஞ்ஞான ரீதியாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதற்கு மாநில சர்கார் ஒத்துழைக்க வேண்டும்.

     கேள்வி கேட்கிறோம்

    கேள்வி கேட்கிறோம்


    எங்கள் கூட்டணிக் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி நாடாளுமன்றத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து, அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

    English summary
    Karti Chidambaram MP has said that the problem of drinking water should be Solve scientifically.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X