Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலுக்கு வருவீங்களா? தயாநிதி அழகிரி கொடுத்த பதில்! அப்படியே உதயநிதி ஸ்டாலின் மாதிரியே!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியிடம் 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் அளித்த பதில் என்னவென்று பாருங்கள்..

திமுக தலைவராக கருணாநிதி இருந்த போது திமுக தென் மண்டல தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த மு.க.அழகிரி சில சர்ச்சைகள் காரணமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேட்டியளித்தும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் அழகிரி. பின்னர், குடும்பத்தினரின் பேச்சுவார்த்தை காரணமாக சைலண்ட் ஆக ஒதுங்கி இருந்து வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனபிறகு அவருக்கும் வாழ்த்தும் தெரிவித்தார் மு.க.அழகிரி.

Durai Dayanidhi Azhagiri answer to the question about will he enter politics

உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினரோடு நல்ல உறவைப் பேணி வருகிறார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.அழகிரியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் உதயநிதி. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தயாளு அம்மாளின் 90வது பிறந்த நாள் விழாவின்போது மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இருவரும் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் பேசிக்கொண்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.அழகிரி உடன் ஸ்டாலின் தரப்பு நெருக்கம் பாராட்டி வருவதால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தயாநிதி அழகிரிக்கு சீட் வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது திமுகவினர் மத்தியில் உலவி வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் குடும்பத்தினர் மத்தியில் பேச்சு நிலவுகிறதோ இல்லையோ, மதுரை திமுகவில் இந்தப் பேச்சு சிறகடித்து வருகிறது.

2024 மக்களவை தேர்தலில் துரை தயாநிதி அழகிரியை மதுரை மக்களவைத் தொகுதியில் களமிறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் மதுரையில் துரை தயாநிதி அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு, '2024 மதுரையின் நாயகனே வெல்க; நீ அஞ்சா நெஞ்சன் வீட்டுப்பிள்ளை, உன் விசுவாசிகள் தஞ்சம் போனதில்லை. தொண்டர்களின் தோழனே, தொடரட்டும் கழக சாதனை' எனவும் மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அழகிரி விசுவாசிகள்.

Durai Dayanidhi Azhagiri answer to the question about will he enter politics

இதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் துரை தயாநிதியை களம் இறக்க வேண்டும் என அவர்கள் சூசகமாக தலைமைக்கு வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியை மீண்டும் எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென சிபிஐஎம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த துரை தயாநிதியிடம் செய்தியாளர்கள், "அரசியலுக்கு வருவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "இப்போது கோர்ட்டுக்கு வந்துள்ளேன்" என பதில் அளித்துவிட்டு காரில் ஏறிச் சென்றார். கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் துரை தயாநிதி. அதன் பிறகுதான் அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். துரை தயாநிதியின் பதிலைக் கேட்ட அங்கிருந்தவர்கள் உதயநிதி ஸ்டாலின் போலவே ரிப்ளை கொடுக்கிறாரே என கமென்ட் அடித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+