அழைப்புக் கடிதம் தொடங்கி பிரச்சார வேன் வரை... மு.க.அழகிரிக்காக வியூகம் வகுத்து கொடுத்த மகன் துரை..!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்தபடி ஆதரவாளர்களை சந்தித்து தனது மனக் குமுறலை கொட்டி தீர்த்திருக்கிறார்.
எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் திரண்டிருந்ததால் மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியை பாராட்டியிருக்கிறார்.
ஏனெனில் அழைப்புக் கடிதம் தொடங்கி மு.க.அழகிரியை பிரச்சார வேனில் பவனி வர வைத்தது வரை மகன் துரை தயாநிதி தான் கவனித்துக்கொண்டார்.

அழகிரி பேட்டி
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திரும்பிய மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் திமுக மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி சென்றார். பிறகு ஓரிரு நாட்களில் மதுரையில் ஜனவரி 3-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
Recommended Video


ஆட்கள் திரட்டி
அந்த அறிவிப்பை அழகிரி வெளியிட்டது முதல் அவருக்காக பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கினார் துரை தயாநிதி. அப்பாவுக்காக பணிகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்த துரை தயாநிதி, ஆதரவாளர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி முதல் கூட்டத்திற்கு ஆட்கள் திரட்டி வருவது வரை அவரே அனைத்தையும் மேற்கொண்டார்.

மகிழ்ச்சி
மேலும், ஆதரவாளர்களை சந்திக்க செல்லும் போது வழக்கமான காரை தவிர்த்து அழகிரியை பிரச்சார வேனில் அமரவைத்து அழைத்துச் சென்றவரும் துரை தயாநிதி தான். பல ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சார வேனில் நின்றவாறு ஆதரவாளர்களை நோக்கி கையசைத்து சென்ற அழகிரிக்கு இந்த நிகழ்வு அளவற்ற மகிழ்ச்சியையும் பழைய நினைவுகளையும் கொண்டு வந்திருக்கிறது.

பரிச்சயம்
ஒரு வழியாக ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்த மு.க.அழகிரி, இதற்காக உழைத்த துரை, மன்னன், கோபிநாதன், ராஜ், உள்ளிட்ட பலருக்கும் நேற்றிரவு நன்றி சொல்லியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனது பேச்சு எப்படி என்பது பற்றி மாவட்ட அளவில் தனக்கு பரிச்சயமான நபர்களை தொடர்பு கொண்டு ரியாக்ஷன் கேட்டிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications