மதுரையில் 4 நாட்கள்.. முக்குலத்தோர் ஆதரவை பெறும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக கணக்கு என்ன?
மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகலுக்கு பின், அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை சரி செய்யும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக அரசியலில் மதுரை மாவட்டத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்பட்ட நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நடத்தப்பட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை மதுரையின் 10 தொகுதிகளிலும் சுற்றி வந்து மக்களை சந்திக்கிறார். 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி மதுரையில் இருந்து தொடங்கியது என்று சொல்லலாம். ஏனென்றால் அதிமுகவின் கோட்டையான மதுரையின் 10 தொகுதிகளில் திமுக 5ஐ கைப்பற்றியது. இதன்பின் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.
தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா என்று 3 முக்கிய நிர்வாகிகள் இருந்தும் மதுரையை கைப்பற்ற முடியாது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் மதுரையில் ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ உள்ளிட்டவை அதிமுகவை இன்னும் பின்னுக்கு தள்ளியது.
விஜய் மாநாட்டில் குவிந்த கூட்டமும் அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் மதுரையின் பல்வேறு தொகுதிகளிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயிக்கப்படும். இதனை சட்டசபைத் தேர்தலுக்கு முன் சரி செய்யும் கணக்கில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதற்கான முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பரங்குன்றம், செப்டம்பர் 2ஆம் தேதி மேலூரிலும், செப்டம்பர் 3ஆம் தேதி மதுரை மேற்கு, மத்திய தொகுதி மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளிலும், கடைசி நாளில் சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளிலும் மக்களை சந்திக்க உள்ளார். அதேபோல் வணிகர்கள், முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகள், செளராஷ்டிரா சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் விலகலுக்கு பின் முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு குறைந்திருக்கும் நிலையில், அதனை சரி செய்வதே எடப்பாடி பழனிசாமியின் முதன்மை நோக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த 4 நாள் பயணத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சில ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளையும் சந்திக்க வைக்க அதிமுகவினர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications