எடப்பாடி பழனிசாமி கையில் வைகைச்செல்வன் கொடுத்த சமாதானப் புறாக்கள்! அந்த ஒரு செகண்ட் மூவ்மெண்ட்!
மதுரை: மதுரையில் அதிமுக மாநாடு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில் காலையில் கொடியேற்றி வைக்க வந்த எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானப் புறாக்களை பறக்கவிடும் படி வழங்கினார் வைகைச்செல்வன்.
ஆனால் ஏனோ தெரியவில்லை, வெள்ளை நிற சமாதானப் புறாக்களை பறக்கவிடுவதில் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டவில்லை. கையில் மூன்று புறாக்களை வைத்துக் கொண்டு நின்ற வைகைச் செல்வன், கூட்ட நெரிசலில் அதை எடப்பாடி பழனிசாமி கையில் கொடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டார்.

அந்தளவுக்கு கையில் புறாவை வைத்துக் கொண்டு இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார் வைகைச் செல்வன். இதனிடையே எப்படியோ தட்டுத்தடுமாறி ஒரு வழியாக வெள்ளை நிற சமாதானப் புறாவை எடப்பாடி பழனிசாமி வசம் அவர் ஒப்படைக்க, அதை ஒரே செகண்ட்டில் சம்பிரதாயத்துக்காக இந்தப் பக்கம் வாங்கி அந்தப்பக்கம் அப்படியே விட்டுவிட்டார்.
இதன் மூலம் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை இப்படி சிம்பாளிக்காக உணர்த்தியுள்ளார் போல் எடப்பாடி பழனிசாமி.

அதேபோல் இரண்டாவது சமாதானப் புறாவையும் அவர் ஆர்வமுடன் வாங்கி உயரப் பறக்கவிடவில்லை. பெயருக்கு அந்தப் பக்கம் வாங்கி இந்தப்பக்கம் இறக்கையிலிருந்து கையை எடுத்துக் கொண்டது போலவே தெரிந்தது. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் கூட்ட நெரிசல் காரணமாக மூன்றாவது சமாதானப் புறாவை எடப்பாடி பழனிசாமி கையில் கொடுப்பதற்கு முன்னரே அது பறந்துவிட்டது.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வெள்ளி செங்கோல், ஏலக்காய் மாலை, வீரவாள், என எடப்பாடி பழனிசாமிக்கு காலையிலேயே மாநாடு நினைவு பரிசுப்பொருட்களை கொடுத்து அசத்தினர்.












Click it and Unblock the Notifications