எதுக்கெடுத்தாலும் என்னையே பேசுறாங்க! செல்லூர் ராஜுவுக்கு நான் உதவி பண்ணலை! அமைச்சர் மூர்த்தி சுளீர்
மதுரை: பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை எனவும், அதிமுக ஆட்சிக் காலத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அமைச்சர் மூர்த்தி பதிலடி கொத்துள்ளார். மேலும், செல்லூர் ராஜுவுக்கு தான் உதவியதாக சொல்லப்படும் தகவல் உண்மையில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பாரதியார் சாலை பகுதியில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்" பொதுவாக அரசியல் பேசக்கூடாது என்று தான் நான் நினைப்பேன். ஆனால் தற்போது பேசக்கூடிய ஒரு நிலை வந்துவிட்டது. யாரை கேட்டாலும் எதற்கெடுத்தாலும் அமைச்சர் மூர்த்தி மூர்த்தி என்று சொல்லும் வேளையில் நானும் பேசித் தான் ஆக வேண்டும்.

அமைச்சர் மூர்த்தி
மதுரையில் பிரச்சாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, பத்திரப்பதிவுத் துறையில் பதிவு செய்யப்படும், ஒரு பத்திரத்திற்கு 10 சதவீதம் கமிஷன் பெறப்படுவதாக கூறியுள்ளார். யார் கமிஷன் கொடுத்தது? பெற்றது? என அவர்தான் கூற வேண்டும். பொதுமக்கள் மட்டுமல்ல, அதிமுக கட்சி சார்ந்தவர்களும் பத்திரம் பதியத்தான் செய்கிறார்கள். எந்த பத்திர அலுவலகத்தில் பத்து சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் கூற வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி
கடந்த கால ஆட்சி நடைபெற்ற போது பத்திரப்பதிவு துறையில் எவ்வளவு சீக்கிரம் பதியப்பட்டது என்பதை கூற வேண்டிய காலகட்டம் வந்தால் நிச்சயம் நான் கூறுவேன். எந்த வருடம் எந்தெந்த இடங்கள் பத்திரம் பதிவு நடைபெற்றது என்பது குறித்த விபரங்கள் என்னிடம் இருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த நிலமும் இதுபோன்று பதிவு செய்யப்படவில்லை. எந்த ஒரு சார்பு பதிவாளர்களோ தவறு செய்திருந்தால் சுட்டிக் காட்டினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரப் பதிவு
அரசியல் பண்ண வேண்டும் என்ற காரணத்திற்காக இதை வேண்டுமானாலும் சொல்ல வேண்டும் என்று சொல்லக்கூடாது. எப்போது பார்த்தாலும் மதுரையில் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்கும் இவர்களுக்கு பதில் கூற விரும்புகிறேன். 8000 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து இருக்கிறோம். குறிப்பாக மேற்கு தொகுதியில் 300-க்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை நாங்கள் செய்திருக்கிறோம். சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்பு பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திமுக அரசு தமிழகத்துக்கு செய்து வருகிறது.
10% கமிஷன்
அரசியல் பேச வேண்டாம் என்று நினைத்தாலும், அதனை பேசக்கூடிய சூழ்நிலையில் நான் தற்போது இருக்கிறேன். நான்காம் தேதி தமிழக வரலாற்றிலேயே 274 கோடி அளவிற்கு ஒரே நாளில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்னர் 8000 முதல் 9000 கோடி ரூபாய்கள் தான் இருந்தன. ஆனால் தற்போது திமுக அரசு வந்ததற்கு பிறகு பல்லாயிரம் கோடி ரூபாய் பத்திரப்பதிவு துறை மூலம் ஈட்டப்பட்டு வருகிறது. எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் எந்த கட்சி நிகழ்ச்சி நடத்தினாலும் நாங்கள் கண்டு கொள்வது கிடையாது. அவர்கள் நடுரோட்டில் நின்று தான் பேசினார்கள். நாங்கள் எதையுமே கண்டு கொள்வதில்லை.
செல்லூர் ராஜு
கலைஞர் உரிமைத் தொகை கொடுத்திருக்கிறோம். தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு வழங்கி வருகிறோம். அரசியலில் பேசுவது முக்கியமல்ல. செயலில் காட்ட வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் என்ன முடிவு என்பதை நீங்கள் பாருங்கள். நாங்கள் எந்த பில்டப்பும் செய்வது கிடையாது. செல்லூர் ராஜு பணம் போனதற்கு மூர்த்திதான் சப்போர்ட் செய்து என்று சொல்கிறார்கள். நான் எந்த காவல் நிலையம் சென்றேன். அவர் அவர் வேலையை பார்க்கிறார். நான் என் வேலையை பார்க்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications