Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலி சான்றிதழ்.. தமிழக அரசு பணிகள்.. டிஎன்பிஎஸ்சி-க்கு பறந்த முக்கிய உத்தரவு.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தவர்கள் மீது, குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த வக்கீல் சக்திராவ் என்பவர், மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில், என்பிஎஸ்சி கடந்த 2020ல் நடத்திய குரூப் 1 தேர்வில் பங்கேற்றேன். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பிரதான எழுத்துத்தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இல்லை.

Fake Certificate and Madurai High Court Major orders fake certificates for join government jobs

வாய்ப்பு: தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட்டும், எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, கல்லூரிக்கு சென்று முழுநேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென மனு செய்திருந்தேன்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, நிர்ணயிக்கப்பட்ட முழு கல்வித்தகுதியையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கே 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்த லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டுமென கடந்தாண்டு உத்தரவிட்டது.

உத்தரவு: ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, ''போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிஎன்பிஎஸ்சிக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

போலி சான்றிதழ்: இதையடுத்து நீதிபதிகள், ''போலிச் சான்றிதழ் மூலம் அரசு உயர் பதவிகளுக்கு வருவோர்கள், லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வார்கள்? இந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாக செய்வார்களா? இந்த சம்பவங்களால் இரவு, பகலாக அரசுத் தேர்வை நம்பி படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது.

போலிச்சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு பதவி வகிப்போர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.

லஞ்ச ஒழிப்புத்துறை: விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை டிஎன்பிஎஸ்சி கவனமாக மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று உத்தரவில் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+