இதென்ன வனவிலங்கு சரணாலயமா? சுயமரியாதை பேசிய விஜய்.. கம்பிகளில் க்ரீஸ் தடவிய தவெக.. அடபோங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் மதுரை மேடையில் உள்ள கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டு திடலுக்கு நள்ளிரவில் இருந்தே தொண்டர்கள் குவிந்த நிலையில் விஜய் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Manadu Vijay Madurai TVK

மாநாடு பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டமிடப்பட்டு உள்ளது. தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு மேடை க்ரீஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் மதுரை மேடையில் உள்ள கம்பிகளில் க்ரீஸ் தடவப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே விஜய் இன்று ரேம்ப் வாக் செய்ய உள்ளார். அந்த மேடையை சுற்றி உள்ள கம்பி வழியாக மக்கள் வரக்கூடாது என்று அங்கே க்ரீஸ் தடவப்பட்ட உள்ளது.

இதை ரசிகர்கள் கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளனர். அங்கே உள்ளே தொண்டர்கள்/ ரசிகர்கள் பலர், இதென்ன வனவிலங்கு சரணாலயமா? அங்கேதான் விலங்குகள் வெளியே வரக்கூடாது என்று கம்பி போடுவார்கள். இங்கே பாதுகாப்பிற்கு கம்பி போடுவது இருக்கட்டும்.. அதில் என்ன க்ரீஸ் தடவுகிறார்கள்.

கொந்தளித்த தவெக தொண்டர்கள்

இதெல்லாம் தவறு. இந்த ஐடியா எல்லாம் விஜய்க்கு யார் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்களை கேவலமாக நினைத்து இப்படி செய்கிறார்கள். மக்கள் கிட்ட வரக்கூடாது என்றால் நீங்கள் எப்படி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் எப்படி மக்களோடு மக்களாக இருப்பீர்கள்?

மக்கள் ரேம்ப் வாக் நடக்கும் இடத்திற்கு வரக்கூடாது என்றால்.. நீங்கள் ஏன் முதலில் ரேம்ப் வாக் செய்யவேண்டும். இதெல்லாம் ரொம்ப தவறான செயல். நாங்கள் வெயிலில் நிற்கிறோம். தண்ணீர் கூட இல்லை. நாங்கள் என்ன இந்த கம்பியில் சீறி பாய்ந்து விடுவோமா? இப்படி எல்லாம் செய்தால் நாங்கள் உடைத்துவிட்டு போவோம். இதெல்லாம் தவறானது.. வன்மையாக கண்டிக்கிறோம்

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மேலே மேற்கூரை போடப்படவில்லை. இதனால் தொண்டர்கள் பலரும் கடுமையான வெயிலில் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையும் தொண்டர்கள் பலர் சுட்டிக்காட்டி விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+