சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு!
மதுரை: மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்த போது சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரச்சார வாகனத்தில் சென்றார். திருப்பத்தூர் அருகே விஜய் பிரச்சார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பணம், பரிசுப் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என்பதை தொடர்ந்து அவரது வாகனத்தை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்தது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதையடுத்து 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது. இதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்து பறிமுதலையும் செய்கிறார்கள்.
திருவாரூருக்கு பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் சோதனை செய்யப்பட்டது. அது போல் எடப்பாடி பழனிசாமி, சீமான், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களையும் சோதனை செய்கிறார்கள்.
உதகை சட்டசபை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications