மதுரை ஹைகோர்டில் ஆஜரான சுப்ரியா சாகு ஐஏஎஸ்.. நீதிபதி சொன்ன முக்கியமான விஷயம்
மதுரை: வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜரான நிலையில், கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுவதாக கூறிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல என தெரிவித்துள்ளது.
வனத்துறையில் காவலராக பணியாற்றியவர் கருப்பையா. திருச்சியை சேர்ந்த இவர் கடந்த 2014-ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் கருப்பையா, வனத்துறை உயர் அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2017-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் புகார் குறித்து தமிழக வனத்துறை செயலாளர் ஐகோர்டிற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார்.
பின்னர் நீதிபதி பட்டு தேவானந்த், கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுவதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்க மல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறிய நீதிபதி, நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமதமாகிறது என்று கேள்வி எழுப்பியதுடன், உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, மனுதாரர் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications