தலையெழுத்து.. திமுக தலைமை மீது சீனியர்கள் அப்செட்டாம்! மரியாதை தராத ஜுனியர்கள்.. யார் சொல்றாங்க?
மதுரை : இன்றைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களில் கூட தலையெழுத்து என்று தான் உட்கார்ந்து உள்ளார்கள் எனவும், கட்சியிலும் ஆட்சியிலும் அவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
டி.குண்ணத்தூர் அம்மா கோவிலில் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் 4 வது நாளாக நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினார்.

அப்போது பேசிய அவர்," கடந்த 40 மாதம் திமுக ஆட்சியில் ஆட்சி என்ற பெயரில் அலங்கோலம் தான் நடைபெற்று வருகிறது, இன்றைக்கு விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராடி பெறுகிறார்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கூட மக்களுக்கு வழங்க முடியாத அரசாக உள்ளது. இன்றைக்கு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வரம் தர வேண்டிய அரசு அவர்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வாக்குறுதியை அள்ளி வீசினார்கள். இதுவரை மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிருக்க வேண்டும். ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்பி இருக்க வேண்டும் எதையும் செய்யவில்லை. எங்களிடத்தில் வேலைவாய்ப்பு தராததற்காக அனைத்து புள்ளி விபரம் இருக்கிறது.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானாக வளரும் என்று சொல்வார்கள். ஆனால் தன் பிள்ளையை ஊட்டி வளர்ப்பவர்கள், மக்களுக்கு எதையுமே செய்யவில்லை. இன்றைக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று கூறிவிட்டு கொடுக்காமல் இருப்பதற்கு யார் பொறுப்பு. இன்றைக்கு பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார்கள் பெற்றோர்கள்.
ஆனால் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் நிறைவேற்றவில்லை. கல்வி கடனை இன்னும் ரத்து செய்யவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யவில்லை, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக உயர்த்துவோம் என்று கூறினார்கள் அதையும் செய்யவில்லை.
இன்றைக்கு திமுக மெஜாரிட்டியாக உள்ளது யாரும் கேட்க மாட்டார்கள் என்று உங்கள் மகனை துணை முதலமைச்சர் ஆக்கி உள்ளீர்கள்? ஆனால் இன்றைக்கு இளைஞர்களை பற்றி நீங்கள் என்ன அக்கறை எடுத்தீர்கள்? வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தால் உங்கள் மகனை துணை முதலமைச்சர் என்று அறிவிப்புத்தான் வருகிறது இது இளைஞர்களுக்கு இடியாக உள்ளது.
இன்றைக்கு திமுக மூத்த அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களில் கூட தலையெழுத்து என்று தான் உட்கார்ந்து உள்ளார்கள் ஏனென்றால் அவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. திமுகவில் மூத்த முன்னாள் அமைச்சர்களை ஜூனியர்கள் மதிப்பதில்லை, அவர்களுக்கு உரிய மரியாதை கட்சியிலும் ஆட்சியிலும் இல்லை, எல்லாவற்றுக்கும் இளவரசர் தான் காரணம்.
மகனுக்காக கட்சியினரை மதிக்காத சூழல் திமுகவில் நிலவுகிறது. இளைஞர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 9 ம் தேதி அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இளைஞர்கள் கொடுக்கும் உரிமைக்குரல் கோட்டையில் எதிரொலித்து அரசை ஆட்டம் காண வைக்கும்" என்றார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications