வேப்ப மரம் பட்டுப் போச்சு..! அப்படியே எம்ஜிஆரை போலவே.. படக்கென விஜய்யை பாராட்டிய செல்லூர் ராஜூ..!
மதுரை: நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர்.. அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி எனவும், எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர் 70 கிலோ கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார் அப்போது பேசிய அவர்,” திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அதைப்போல சினிமாத் துறையையும் கைப்பற்றி உள்ளனர். திமுகவினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை.
உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. தமிழகத்தில் இது ஒரு பண்பு. யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி..சந்தோஷம். திமுக ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப்பார்க்கின்றனர். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்ஜிஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துவது அவர்களுக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை.
அதிமுக பிளவு பட்டா இருக்கிறது? என்று கேள்வி எழுப்புகிறார்கள். வேப்பமரம் போல் பட்டு போச்சு என்று பிற கட்சிகள் அதிமுகவை நினைத்தார்கள்? அது ஈடேறாது.. அதிமுக கட்சி பீனிக்ஸ் பறவை போல அழிவது போல தெரியும். ஆனால் வீறு கொண்டு எழும்.. அதிமுகவை தேடி பெரும்பாலான இளைஞர்கள் வருகிறார்கள் அதிமுக வேடந்தாங்கல் பறவையைப் போன்றது" என்றார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications