தமிழ்நாடு இப்போ நிம்மதியா இருக்கு..”அவர்” அமெரிக்காவில் இருப்பதே நல்லது! யார் சொல்றாங்கன்னு பாருங்க!
மதுரை: சென்னை பொத்தேரி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, மாணவி உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கஞ்சா சோதனை முதல்வர் ஸ்டாலின் இல்லாததால் தான் நடைபெற்றது எனவும், அவர் அமெரிக்காவில் இருப்பதுதான் நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
சென்னை செல்லும் வழியில் பொத்தேரி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல பல்கலைக் கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவ, மாணவிகள் பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் குடியிருப்புகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருக்கும் நிலையில் அங்கு கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து அங்கு காலை ஆறு மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் நுழைந்து கல்லூரி மாணவர்களின் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரிய வந்தது. இதை அடுத்து அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய், கஞ்சா புதைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் கஞ்சா விற்ற இரண்டு பேர் கஞ்சா பயன்படுத்திய ஒரு மாணவி உள்ளிட்ட 19 மாணவர்கள் என மொத்தம் 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கஞ்சா சோதனை முதல்வர் ஸ்டாலின் இல்லாததால் தான் நடைபெற்றது எனவும், அவர் அமெரிக்காவில் இருப்பதுதான் நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னால் அமைச்சர் செல்லூர் கே ராஜு கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செல்லூர் ராஜு பேசிய போது,” திமுக இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறது. ஆட்சிக்கு வரும்போது விடியல் தருவோம் என்று கூறினார்கள் இப்போது விடியல் தந்தார்களா?

மின் கட்டணம் ஏற்ற மாட்டோம் என்று கூறி விட்டு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள்.. மாதம் ஒருமுறை மின் கட்டணம் எடுப்போம் என்று கூறினார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எல்லாம் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் கிளைச் செயலாளர்களாக மாறி விடுங்கள். இன்றைக்கு கஞ்சா விதவிதமாக பயன்படுத்துகிறார்கள் கஞ்சா மிட்டாய் கொஞ்சம் ஆயில் கஞ்சா பை மூலம் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். சென்னையில் போதைப் பொருள் பயன்படுத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இல்லாததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். ஸ்டாலின் சிறிது காலம் அமெரிக்காவிலே இருக்கட்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தாலிக்கு தங்கம் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் சந்து பொந்து எல்லாம் பிராந்தி கடை திறந்து போதைக்கு அடிமையாக்கி புது புது போதை கொடுக்கிறார்கள். இதில் அமைச்சர் துரைமுருகன் கிக்கு சரியில்லை.. அதனால் கிக்கை தேடி போகிறார்கள் என்று இழிவாக பேசுகிறார். இது அமைச்சர் பேசும் பேச்சா?” என்றார்.












Click it and Unblock the Notifications