தேர்தல் வெற்றி செல்லாது…. காங்., முன்னாள் எம்எல்ஏ வேல்துரை சம்பளத்தை திருப்பி செலுத்த உத்தரவு
மதுரை: தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 2006 - 2011 வரையிலான காலத்தில் சேரன்மாதேவி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேல்துரை சம்பளத்தை 4 வாரங்களுக்குள் திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2006 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மனோஜ் பாண்டியன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஒப்பந்தப் பணிகள்
அதில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேல்துரை அரசுக்கு சொந்தமான நபார்டு வங்கியின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்றும் விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் மேல்முறையீடு செய்தார் அப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் வெற்றி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஓய்வூதிய பயன்கள் கிடைக்காது
முன்னர், ஒரு எம்எல்ஏ தனது பதவி காலம் முழுவதையும் அனுபவித்த பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு ஓய்வூதிய பயன்கள் கிடைக்காது. ஏற்கனவே பெற்ற சம்பளம் படிகளையும் திருப்பி அளிக்க தேவையில்லை. அதேசமயம் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி பறிபோகும்
தற்போதைய நடைமுறையில், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் பதவி பறிபோகும் சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை 4 வாரங்களில் ரூ.21.58 லட்சம் சம்பளத்தை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications