கானா பாடகி இசைவாணி விவகாரம்.. இதை சும்மா விடமாட்டோம்.. கோர்ட்டுக்கு போவோம்.. பாஜக லீகல் டீம் அதிரடி
மதுரை : ''சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பாஜக புகார் கொடுக்கும் என்று வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்துள்ளார். இசைவாணி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோர்ட்டை நாட போவதாகவும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியாக "கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" என்ற இசைக்குழு உள்ளது. இந்த இசைக்குழுவில் பிரபல கானா பாடகியும், பிக்பாஸ் போட்டியாளருமான இசைவாணியும் உள்ளார். இவர் கடந்த வருடம் பாடியிருந்த ஐயப்பன் பாடல், தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

எதிர்ப்பு: "ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்று அந்த பாடலை இசைவாணி பாடியிருந்ததால், ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.. அத்துடன், பா ரஞ்சித் மற்றும் இசைவாணிக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது..
நேற்றைய தினம், இசைவாணியின் பாடல் சர்ச்சையாகியுள்ளது குறித்தும், அவர்மீது புகார்கள் தரப்பட்டுள்ளது குறித்தும் அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்..
சேகர் பாபு: அதற்கு அமைச்சர், "ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரை இழிவுப்படுத்துவதை நிச்சயம் முதல்வர் அனுமதிக்கமாட்டார்கள்.. எனவே, இந்த விவகாரத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் சட்டம் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். மதத்தால், இனத்தால் மக்களை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்த ஆட்சியில் தலைத்தூக்க முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்'' என்றார்.
எனினும், இசைவாணிக்கு எதிராக பாஜகவினர் கொந்தளித்து வருகிறார்கள்.. குறிப்பாக பாஜக வழக்கறிஞர் அணி ஒன்றுதிரண்டுள்ளனர்.. இசைவாணி மீது பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அச்சுறுத்தல்: அதில், "இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். "ஐம் சாரி ஐயப்பா" என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல், ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைத்துள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட எண்ணத்துடன் இசைவாணி செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சபரிமலை ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானாபாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
புகார்கள்: அந்த புகாரில், "இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாத்திக சக்திகளும், பிரிவினைவாதிகளும், இரண்டு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. நீலம் பண்பாட்டு மைய அமைப்பின் பா. ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர், ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடி, அதை வெளியிட்டுள்ளனர்.
ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் கார்த்திகை மாதத்தில், இதுபோன்ற பாடலை வெளியிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், எங்கள் கட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்துள்ளனர்.
வணங்காமுடி: இதனிடையே, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தேசிய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது... இதில், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வணங்காமுடி, "சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் புகார் அளிக்கப்படுகிறது. இந்தப் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
திட்டமிட்ட சதி: இசைவாணி பாடல் ஒரு திட்டமிட்ட சதி, இந்து மதத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்கின்றனர். இதற்கும் தமிழத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கும் தொடர்பு உள்ளது. பல்வேறு இயக்கங்கள் வைத்தும் சில நபர்களை வைத்தும் இந்து மதத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்து மதக் கடவுள்களை திட்டமிட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சதியாகத்தான் பார்க்கிறோம்.. ஐயப்பன் பாடலை வைத்து இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை பாஜக வழக்கறிஞர் பிரிவும் சும்மா விடாது" என்று வணங்காமுடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனக்குப் பாதுகாப்புக் கோரி மனு அளித்திருப்பதோடு, தனக்கு ஆபாச செய்திகளை அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் அளித்துள்ளார் இசைவாணி. 6 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு கடந்த ஒரு வார காலமாக சமூக வலைதளங்களில் ஒரு குழு அவதூறு பரப்பி வருகிறது என்கிறது, நீலம் பண்பாட்டு மையமும் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications