விநாயகர் சதுர்த்தி : தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக பாஜக, இந்துமுன்னணியினர் போராட்டம்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதை திமுக அரசு தடை செய்துள்ளதை கண்டித்து மதுரையில் இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினரும் பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை இந்து முன்னணி, வி.எச்.பி, பாஜக, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களின் சார்பிலும் கொண்டாடப்படுகிறது.

மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீதிகளில் முக்கிய இடங்களில்பிரதிஷ்டை செய்து, 3 நாட்கள் வழிபாட்டுக்கு பிறகு, ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு தடை நீடிக்கிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், விநாயகர் சிலைகள் ஊர்வலம், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை தனி நபர்களாக தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதியளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மதிக்கப்போவதில்லை என்றும், கடந்த ஆண்டு நீதிமன்றம் காட்டிய வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை தமிழகம் முழுவதும் பிரதிஷ்டை செய்ய இருப்பதாக இந்து முன்னணியும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் போராட்டம்
மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுத சுவாமி முருகன் கோவில் அருகே இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனாவை காரணம்காட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்துவதற்கு தடை விதித்துள்ள திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அனைவரும் கையில் விளக்கை ஏற்றி திமுக அரசிற்கு நல்ல புத்தியை வழங்க வேண்டும் என்றும், விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்த அனுமதி தர வேண்டுமென்றும் முழக்கமிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி, "விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு தடை விதித்தால், அந்த தடையை மீறி இந்த ஆண்டு விழாவை நடத்துவோம் என்றார். இதற்கு முந்தைய ஆண்டுகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடைவிதித்த பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசின் நிலைப்பாடு என்னவாயிற்று என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தென்காசியில் ஆர்ப்பாட்டம்
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்க வேண்டி காசி விசுவநாதர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மது கடைக்கு அனுமதி பிள்ளையார் வைக்க கெடுபுடியா என்று முழக்கமிட்டனர். விநாயகருக்கு தடை விதித்தால் தமிழக அரசே உனக்கு பெரும்பாடு.. என்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகம் சாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தென்காசி நகர தலைவர் நாராயணன் நகர துணைத்தலைவர் சொர்ண சேகர் நகரச் செயலர் மாதேஷ்நகர செயற்குழு உறுப்பினர் மாரி மது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன் பாஜக மூத்த உறுப்பினர் ஈஸ்வரன் ஹிந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் கோமதி சங்கர் இந்து ஆட்டோமுன்னணி நடராஜன் சுப்புராஜ் ஆறுமுக கானி பேச்சு பாஜக நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார் பாஜக முன்னாள் கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் விஎச்பி நகர தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி தடையை நீக்கக்கோரி தமிழக அரசுக்கு நல்ல புத்தி வரவேண்டும் விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பாக திசையன்விளை அற்புத விநாயகர் அருள் ஆலயத்தில் வைத்து பிராத்தனை செய்யும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் விக்னேஷ் ,ஒன்றிய தலைவர் கணேசமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சுப்பையா ,நகர பொருளாளர் செந்தில் ,நகரச் செயலாளர் ஐயப்பன்,வழக்கறிஞர் கமலேஷ் ,மற்றும் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications