மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் பள்ளம்.. மண் சரிந்து விழுந்த சிறுமி.. மதுரையில் அதிர்ச்சி
Recommended Video
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் பணிக்கு பள்ளம் தோண்டிய போது மண் சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் சிறுமி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூன்றடுக்கு நவீன வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ஆனது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தரை தளம் அமைப்பதற்காக 20 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் அதிகளவு குடியிருப்புகள் உள்ளது.

இந்த நிலையில் பள்ளத்தை ஒட்டி இருக்கக் கூடிய சப்பாணி தெரு பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற சிறுமி திடீரென தவறி உள்ளே விழுந்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று மண்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் இருப்பதால் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications