லஞ்சம் வாங்கி சிக்கும் அரசு ஊழியர்கள்.. மறைமுகமாக உதவும் அதிகாரிகள்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தாமதப்படுத்தி அவர்களுக்கு அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கரூர் மின்வாரியத்தில் சரவணன் என்பவர் உள்பட 3 பேர் லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் வழங்கப்பட்ட மெமோவிற்கு எதிரான வழக்கில் தான் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக கைதானால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். மறுபக்கம் சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஒருவேளை அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்தப்பட்டாலும், மெமோ அனுப்பி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் அரசு ஊழியர்களுக்கான நடைமுறையாக உள்ளது.

அந்த வகையில், கரூர் மின்வாரியத்தில் சரவணன் என்பவர் பணியாற்றினார். இவர் உள்பட 3 பேர், சக தொழிலாளர் ஒருவரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 2011-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர். அதன்பேரில் சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க சரவணனுக்கு மெமோ அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தன் மீதான குற்றச்சாட்டின்பேரில் 10 ஆண்டுகள் கழித்து 2021-ம் ஆண்டில் மெமோ அனுப்பி உள்ளனர். இது சட்டவிரோதம். எனவே இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என சரவணன் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து உரிய ஆவணங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
குற்ற வழக்கில் சிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் ஒரே மாதிரியான கொள்கைதான் கடைபிடிக்கப்படுகிறது. மின்வாரியத்தில் 225 ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 56 பேருக்கு மட்டும் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேவையான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்கப்பட்டு உள்ளன என்று மின்வாரிய வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணை முடிவில் நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதனை நீதிமன்றம் கவனித்து வருகிறது.
சில அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை தாமதப்படுத்தி லஞ்ச வழக்கில் சிக்குபவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறார்கள். இதனை அரசு கவனிக்க வேண்டும். இதனால் தங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்தந்த துறை ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடரலாம். இதிலும் தாமதம் ஏற்பட காரணமான அதிகாரி குறித்து துறைத்தலைவரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். மனுதாரர் மீதான லஞ்ச வழக்கை கரூர் மாவட்ட நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications