Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சகாயம் உயிருக்கு ஆபத்து.. பதற வைத்த கடிதம்! மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என காவல்துறை உறுதி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், கிரானைட் குவாரி முறைகேடுகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்தினார். இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி இருந்தார். இந்நிலையில், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஆட்சியராகவும், தமிழகத்தின் பல துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர் சகாயம். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவர் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் இருந்தபோது கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை கண்டறிந்து அம்பலப்படுத்தினார்.

Granite Scam Whistleblower Sagayam to Get Police Protection After Threat Claim

முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த சகாயம்

கடந்த 2014 ஆம் ஆண்டு குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு அதிகாரியாக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது. அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையின் மூலம் ரூ 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குவாரிகளில் இமாலய முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விசாரணைக்கு சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அளித்த கடிதத்தில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை எனவும், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு விலக்கப்பட்டது

எனக்கு மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது தவறானது, முறையற்றது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனக்கு மாநில அரசு கொடுத்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை உறுதி அளித்துள்ளது.

காவல்துறை உறுதி

இது குறித்து தமிழக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணங்களால் அவரால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது நியாயமற்றது என்றும் அவர் கூறியதாகத் தெரியவருகிறது.

சட்டவிரோத கிரானைட் சுரங்கம் தொடர்பான முறைகேட்டை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக சகாயம் செயல்பட்ட காலத்தில் கடந்த 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அவரது பாதுகாப்புக்காக காவல் துறை சார்பில் காவலர் ஒருவர் வழங்கப்பட்டது.

சகாயத்துக்கு மீண்டும் பாதுகாப்பு

பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்த முடிவு, சரியான முறையில் பரிசீலனை செய்யப்பட்ட பின்பே எடுக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+