"முக ஸ்டாலின் ஆட்சியா? முகமது ஸ்டாலின் ஆட்சியா?" போலீசாருடன் எச். ராஜா கடும் வாக்குவாதம்!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? முக ஸ்டாலின் ஆட்சியா? இல்லை முகமது ஸ்டாலின் ஆட்சியா?" என போலீசாருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் எச்.ராஜா.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் இன்று இரவு கொடியேற்றம் நடைபெறும் நிலையில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவதை கண்டித்து போராடிய குடியிருப்புவாசிகள் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்களை பார்க்க வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் உள்ள தர்காவின் அருகில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பில் கொடி ஏற்றப்படுகிறது.
இதற்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மலை பாது பழனியாண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோட்டை தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை, சரவணப் பொய்கை, தென்பரங்குன்றத்தில் உள்ள மலை பாதை மற்றும் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நெல்லி தோப்பு ,தர்கா மற்றும் சர்ச்சைக்குரிய தீபத்தூண் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்துக்களை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை, ஆனால் இஸ்லாமியர்களுக்கு சந்தனக்கூடு திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? என திருப்பரங்குன்றம் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தர்காவில் இன்று இரவு கொடியேற்றம் நடைபெறும் நிலையில் இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படுவதை கண்டித்து போராடிய குடியிருப்புவாசிகள் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்களை பார்க்க வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச்.ராஜா, "இந்த அரசே இந்துக்களுக்கு எதிரானது. டிசம்பர் 1 ஆம் தேதியே தீபம் ஏற்ற ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், இந்து விரோத மாவட்ட ஆட்சியரும், எஸ்.பியும் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. போலீஸ் இந்து விரோத காவல்துறையாக இருக்கிறது. பூரண சந்திரன் சாவுக்கு மதுரை கலெக்டரும், கமிஷனரும் தான் காரணம்.
நீங்கள் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத சட்டவிரோத காவல்துறை தானே.. உங்கள் அப்பீல் உச்ச நீதிமன்றத்தில் நம்பர் ஆகியிருக்கிறதா? நான் இந்துக்களுக்கு ஆதரவாக பேசினால் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பீர்களா? தர்காவில் சந்தக்கூடு நடத்துவது அவர்களின் வழிபாட்டு உரிமை என்றால், நாங்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்வோம். நாங்கள் ஏன் கும்பிடக்கூடாது?
ஸ்டாலின் நிரந்தரம் இல்லை. 5 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சி மாறும். அப்போது நீங்கள் யாருக்கு சல்யூட் போடுவீர்கள்? எங்களை ஏன் எதிரியாக நினைக்கிறீர்கள்? முக ஸ்டாலின் ஆட்சியா? இல்லை முகமது ஸ்டாலின் ஆட்சியா? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? ஸ்டாலினின் சட்டவிரோத உத்தரவுக்கு அடிபணிந்திருக்கிறீர்கள்" என ஆவேசமாக போலீசாரிடம் கேள்வி எழுப்பினார் எச்.ராஜா. பாஜகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications