மதுரை அருகே கிலோ கணக்கில் கோழிக்கறி.. அதென்ன குடில்? திண்டுக்கல், தேனிக்கு செம ஹேப்பி.. பலே கைதிகள்
மதுரை: மதுரை சிறைச்சாலை பலரது கவனத்தையும் திருப்பி வருகிறது.. அதுவும் கோழிக்கறி விற்பனையில்.. இதுகுறித்து மதுரை சிறைக்கண்காணிப்பாளர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனால், கோழிக்கறி விற்பனை பல மாவட்டங்களிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் புழல், புழல்-2, மதுரை, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய சிறைகள் செயல்பட்டு வருகின்றன.

தண்டனை தருவது மட்டும் சிறைச்சாலைகளின் நோக்கம் கிடையாது.. சட்டத்தை மீறி நடக்காமல் சட்டத்தை பின்பற்றுவது எப்படி என்று கற்பித்து, அத்துடன், தனிமனித ஒழுக்கத்தையும் கற்பிக்கும் இடமாகவும் திகழுவதே சிறைச்சாலைகளின் நோக்கமாகும்.. அதனால்தான், தண்டனையை அனுபவித்து வெளியே செல்லும் எத்தனையோ நபர்கள், மனம் திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல்முதலாக பெட்ரோல் விற்பனை
அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆண் கைதிகளுக்காக பெட்ரோல் விற்பனை நிலையம் சென்னை புழலில் முதல்முறையாக திறக்கப்பட்டது..
பிறகு, திருச்சி, வேலூர், கோவை உள்ளிட்ட இடங்களிலும் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு, இவைகளை ஆண் கைதிகள் இயக்கி வருகிறார்கள்.
இதேபோல, வேலூர் மத்திய சிறையில் பெண் கைதிகளுக்கு அழகு கலைப் பயிற்சி முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது... அதுமட்டுமல்ல, சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட 'சிறை அங்காடி'கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும், சிறைக்குள் ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பு, நெசவு, விவசாய உற்பத்தி என பல பணிகளை சிறைவாசிகள் செய்து வருகிறார்கள்.
மதுரை மத்திய சிறைச்சாலை
இந்நிலையில், மதுரை ஜெயில் குறித்தும் முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.. மதுரை மத்திய சிறைச்சாலையை பொறுத்தவரை, நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட ஆண், பெண் சிறை கைதிகள் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் பெண் சிறை கைதிகளுக்கான தனி வளாகமும் உள்ளது..
தற்போது, மதுரை மத்திய சிறையில் டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவுப்படி கோழிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழிகளை இறைச்சியாக்கி புதன், ஞாயிறு அன்று கைதிகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. இதன்மூலம் சிறை நிர்வாகத்திற்கு செலவினம் குறைந்துள்ளது.மொத்தம் 6 குடில்கள் அமைக்கப்பட்டு தலா 1300 கோழிகள் வளர்க்கப்படுகின்றன.. இவைகளை 20 கைதிகள் பராமரித்து வருகின்றனர்..
340 கிலோ கோழிக்கறி விநியோகம்
பொதுமக்களும் சிக்கன் வாங்கும் வகையில் சிறை வளாகத்திலேயே, புதிய கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 நாட்களில் கோழியாக உற்பத்தி செய்து, அவை இறைச்சியாக்கப்பட்டு, கைதிகளுக்கு தலா 150 கிராம் வழங்கப்படுகிறது. இதில், மதுரை சிறைக்கு மட்டும் நேற்றைய தினம் 340 கிலோ கோழிக்கறி வழங்கப்பட்டிருக்கிறது.. அதேபோல, மாவட்ட சிறைகளுக்கு தலா 40 கிலோ வரை வழங்கப்பட்டுள்ளது..
தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிறைச்சாலை
இதுகுறித்து மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் சொல்லும்போது, ''மதுரை சிறை, பெண்கள் சிறை மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர் சிறை கைதிகளுக்கும் கறி வழங்கப்பட்டது. கோழிகளை கண்காணிக்க கால்நடை டாக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி, டிஐஜி முருகேசன் மேற்பார்வையில் கூடுதல் எண்ணிக்கையில் கோழி உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications